தொலைக்காட்சியில் வந்த “அந்த” படம்.. பிளான் பண்ணி வாழ்க்கையை காலி பண்ணிட்டாங்க..நடிகர் ரகுமான் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் ரசிகர்களின் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ரகுமான் பல வருடங்கள் கழித்து முதல் முறையாக தன்னுடைய சினிமா வாழ்க்கை அதில் தான் சந்தித்த கஷ்டங்கள், கிடைத்த மகிழ்ச்சி குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் ரகுமான் சங்கமம் திரைப்படத்தில் கலையை நேசிக்கும் மக்களை அதிகமாகவே கவர்ந்திருந்தார்.

Actor Raghuman emotional in Sangamam movie hardships

ஆனாலும் ஒரு சிலரால் தன்னுடைய வாழ்க்கை மொத்தமாக முடிந்து விட்டது என்று அந்த வருத்தத்தையும் ரகுமான் பகிர்ந்து இருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

அந்த வகையில் நடிகர் ரகுமான் அபுதாபியில் தான் பிறந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 1983 ஆம் ஆண்டு வெளியான கூடுவிடே என்ற மலையாள திரைப்படத்தை இவர் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தான் புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். குறுகிய காலகத்திலேயே தனது நடிப்பின் மூலமாக உயர்ந்த இவர் பில்லா 2, சிங்கம் 2, பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதுபோல நடிகர் ரகுமான் கிராமத்து மைய கதையை மையப்படுத்தி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் சங்கமம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரகுமான் கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக நடிகை வித்யாவும் நடித்திருப்பார். அதுபோல இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தது ஏ ஆர் ரகுமான் தான்.

திரைப்படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. இப்போதும் பலர் மேடைகளில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் தவறாமல் இடம்பிடித்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்திருந்தது. அதுபோல இந்த திரைப்படத்தில் நடிகர் மணிவண்ணன், வடிவேலு விஜயகுமார், ஸ்ரீ வித்யா போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருப்பார்கள். காதல், செண்டிமெண்ட், கலை, காமெடி என அனைத்தும் கலவையாக இந்த திரைப்படத்தில் குவிந்து கிடக்கும்.

அதுபோல இந்த திரைப்படத்தில் கதாநாயகி வித்யா பரதமாடகூடிய பெண்ணாகவும், ரகுமான் நாட்டுப்புற கலைஞராகவும் இருப்பார்கள். இரு கலைகளுக்கும் இடையே ஏற்படும் போட்டியை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் அதில் ஏற்படும் வலி, வேதனை, அவமானம் என அனைத்தும் பலரையும் கவர்ந்திருக்கும்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் மணிவண்ணன் அதாவது ரகுமானின் ( கதாநாயகனின்) அப்பா இறந்து போன நேரத்திலும் தன்னுடைய கலையை வெல்லும் நோக்கில் ரகுமான் "மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்" என்ற பாடலில் ஆடி இருப்பார். இந்த பாட்டு இப்போதும் பல மேடைகளில் ஆடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாடலுக்காக ரகுமான் மிகவும் சிரமப்பட்டு ஆடி இருந்தாராம்.

ஆனால் இந்த படம் வெளியான ஒரு சில தினங்களிலேயே இந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு விட்டதாம். அப்போது ரகுமான் அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார். இது பற்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடமும் பேசி இருக்கிறார். ஆனால் அவர்கள் இதைப் பற்றி எதுவுமே கூறவே இல்லையாம். இப்படத்திற்காக நான் ரொம்பவே உழைத்தேன்.

இதுபோல ரொம்ப வருடங்கள் கழித்து கிடைத்த இந்த படம் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வேறு எந்த திரைப்படத்திற்கும் நான் கால்ஷீட் கொடுக்காமல் நடித்தேன். ஆனால் அப்படி தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து படத்தை சீக்கிரமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது எனக்கு மிகுந்த வேதனையும் கஷ்டத்தையும் கொடுத்திருந்தது. அதனாலேயே என்னுடைய உழைப்பு பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு எனக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராமல் போய்விட்டது என்று வேதனையோடு அந்த பேட்டியில் நடிகர் ரகுமான் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+