சன் டிவி சீரியல் நடிகருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. தமன்னாவோடு அடுத்த ப்ராஜெக்ட்.. அவரே சொன்ன தகவல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் , கண்ணான கண்ணே சீரியல் மற்றும் மருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ராகுல் ரவி தான் நடிகை தமன்னாவோடு நடிக்கப் போகிறேன் என்று ஒரு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராகுல் ரவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ராகுல் ரவி தெலுங்கு, தமிழ் என்ற பலமொழிகளில் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தையும் பெயரையும் வாங்கிக் கொடுத்தது நந்தினி சீரியல் தான். இந்த சீரியலில் கதாநாயகனாக தான் இவர் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியலின் அதிகமான காதல் காட்சிகளில் இவர் நடித்ததால் விமர்சனங்களையும் பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து இவருக்கு கண்ணான கண்ணே சீரியல் வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியலில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

அதுபோல தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் பாலையா நடிப்பில் வெளியான பகவத் கேசரி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் அவருடைய மனைவி ராகுல் ரவி இவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். ராகுல் ரவி அவருடைய மனைவி லக்ஷ்மி நாராயணன் என்ற ஃபேஷன் டிசைனரை 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்திருந்தார்.
அந்த நேரத்தில் தங்களுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் ராகுல் ரவி பகிர்ந்து இருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடைய மனைவி வழக்கு தொடுத்து இருந்ததார். அதற்குப் பிறகுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் மூலமாக கதாநாயகனாக மீண்டும் இவர் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.
சமீபத்தில் கூட பேட்டிகளில் என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் எனக்கு பெரிய பிரச்சனைகள் வந்தது. அதனால் என்னுடைய பெயர் சினிமாவில் கெட்டுப் போயிருந்தது. இப்போது நான் என்னுடைய திறமையால் மீண்டும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தமன்னாவோடு அடுத்த ப்ராஜெக்ட். என்னவாக இருக்கும் என்று கெஸ் பண்ணுங்க என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அதிகமான ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வரிசையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சினிமாக்களிலும் ராகுல் ரவி நடித்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications