கணவர் பயந்த மாதிரியே என் நிலைமை ஆகிவிட்டது.. கண்ணீரோடு தவிக்கும் நடிகர் ராஜசேகர் மனைவி
மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தன்னுடைய நிலைமையை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து வந்த நடிகர் ராஜசேகர் சில வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார்.
தற்போது நடிகர் ராஜசேகரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
தன்னுடைய நிலைமை கடைசி காலத்தில் கஷ்டப்பட்ட கூடாது என்று என்னுடைய கணவர் ராஜசேகர் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று தன்னுடைய நிலைமை பற்றி கண்ணீர் மல்க அந்த வீடியோவில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

நடிகர் ராஜசேகரின் கடைசி ஆசை
80ஸ் மற்றும் 90ஸ்களில் காலகட்டங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் ராஜசேகர் இருந்து வந்தார். அவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட இயக்குனராகவும், ஒளிபதிவாளராகவும் பணியாற்றி இருந்தார். பிறகு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்த நேரத்தில் தான் இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி நடிகர் ராஜசேகர் காலமானார். தான் இறப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் இவருடைய கடைசியாக ஆசையாக இருந்ததாம்.

நிறைவேறாத ஆசை
பல வருடங்களாக திரை துறையில் இருந்தாலும் இவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கி இருக்கிறார். ஆனால் அந்த வீட்டில் குடியேறாமல் ராஜசேகர் அதற்குள் இறந்து விட்டார். அந்த நிலையில் அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் அந்த நேரத்தில் வைக்கப்பட்டு பிறகு எடுத்து சென்றது. தற்போது உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் அவருடைய மனைவி தாரா இருந்து வருகிறார். இந்த நிலையில் தாரா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

எதுவும் சேர்த்து வைக்கவில்லை
அதில் அவர் கூறியிருப்பது ஒளிபதிவாளராக தான் என்னுடைய கணவர் சினிமாவுக்குள் நுழைந்தார். அதற்கு பிறகு சில படங்களை இயக்கினார். அதற்கு பிறகு தான் அவர் நடிகராகவும் ஆனார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருடைய மொத்த சம்பாத்தியத்தையும் குடும்பத்துக்காகவே செலவழித்து விட்டார். தனக்காக எதுவுமே அவர் சேர்த்து வைக்கவில்லை. தன்னுடைய தங்கைகளுக்கு எல்லாம் நிறைய நகைகளை போட்டு அந்த நேரத்தில் திருமணம் செய்து வைத்தார். அதற்குப் பிறகு நடிகை சரண்யாவை தான் முதலில் திருமணம் செய்திருக்கிறார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களாம்.

இரண்டாவது திருமணம்
அதற்குப் பிறகு இரண்டாவதாக தான் தாராவை நடிகர் ராஜசேகர் திருமணம் செய்திருந்தாராம். சினிமாவில் இருந்தபோது அவர் பணத்தை சேமிக்காமல் இருந்திருந்தாலும் சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த பிறகு தான் தனக்கு ஒரு சொந்த வீடு இல்லையே என்று அவர் வருத்தப்பட்டு இருக்கிறார். அதற்குப் பிறகு தாராவின் நிலைமையை நினைத்து அப்போது பயந்தாராம். ஒருநாள் திடீரென்று எனக்கு ஏதாவது ஆனால் உன் நிலைமை என்ன ஆகும் என்று அடிக்கடி புலம்பி கொண்டிருந்தாராம். காலம் கடந்த பின்னாடி அவர் புலம்பி என்ன ஆகப்போகுது விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று அவருடைய மனைவி தாரா கூறியதாக கூறியிருக்கிறார்.

கடனால் ஏற்படும் கஷ்டம்
அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்து தான் வங்கியில் கொஞ்சம் கடனும் வாங்கி வடபழனியில் ஒரு பிளாட்டை வாங்கினாராம். ஆனால் அந்த வீடு பால் காய்ச்சி செல்வதற்கு முன்பே அவர் இறந்து விட்டாராம். இறந்த அவரின் உடலைத்தான் அந்த வீட்டில் கொஞ்ச நேரம் வைத்து இருந்தோம் என்றும் அவர் இறந்த இரண்டாவது மாதத்திலேயே வங்கியில் இருந்து வந்து விட்டார்கள், மீதி கடனை எப்படி கட்டுவீங்க என்று கேட்டு, என்னை தொல்லை செய்தார்கள். பின் நான் அங்கங்க கிடைத்த பணத்தை வைத்து வங்கியில் கட்டினேன். வீட்டில் மொத்த மதிப்பு 60 லட்சம் ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் கட்டினோம். இதுவரை 35 லட்சத்துக்கு மேல கட்டி விட்டோம். மீதி பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று தெரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இனி என் சாப்பாட்டுக்கே என்ன பண்ணுவது என்று தெரியாத சூழ்நிலையில் தான் நான் இருக்கிறேன். இந்த நிலையில் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார்.

யாரும் உதவவில்லை
மேலும் இப்படி ஒரு நிலையில் அந்த வீட்டை ஏலத்துக்கு விடுவதை விட வேற வழி இல்லை என்று வங்கியில் சொல்லிவிட்டார்கள். என்னுடைய கணவர் நடிகர், இயக்குனர்கள், சின்னத்திரை நடிகர் சங்கம் என எல்லா சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். ஆனால் நானும் பல இடங்களில் உதவி கேட்டு போனேன். எதுவுமே நடக்கவில்லை. யாரும் உதவி செய்யவில்லை. என்னுடன் நிலையை விளக்கி முதலமைச்சருக்கு மனு கொடுத்தேன். ஆனாலும் இந்த தேதி வரை எந்த ஒரு பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.

உருக்கமான வேண்டுகோள்
இரண்டு நாளைக்கு முன்னாடி தான் வங்கியில் இருந்து பேசினார்கள். அந்த வீட்டை ஏலத்தில் எடுக்க வங்கி அசோசியேஷனிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அதனால் நீங்கள் முறைப்படி வீட்டை காலி செய்து தந்து விடுங்கள். இல்லை என்றால் போலீசை கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்கள். என்னுடைய கணவர் பயந்தது போலவே என்னுடைய நிலைமை இப்போது நடந்து ஆகிவிட்டது. எந்த நேரத்திலும் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி நடுரோட்டில் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். என்னுடைய கடைசி வேண்டுகோளாக சினிமாவில் இருப்பவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கண்ணீரோடு கோரிக்கை வைக்கிறேன். இந்த பிரச்சனையிலிருந்து என்னை மீட்டு இன்னும் இருக்கிற சில நாட்களில் என்னை நிம்மதியாக வாழ வைக்க உதவி செய்யுங்கள் என்று கண்ணீரோடு ஊருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications