மறைந்த நடிகர் ராஜசேகர் வீட்டிற்கு சீல் வைப்பு.. அத்தனை பேருக்கு சாப்பாடு போட்டவரின் மனைவிக்கு நடந்த சோகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ராஜசேகர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் காலமானார். ராஜசேகர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் வடபழனியில் லோன் போட்டு ஒரு வீடு ஒன்றை வாங்கி இருந்தார். ஆனால் அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டார். அந்த வீட்டிற்கு லோன் கட்டாத காரணத்தால் அந்த வீட்டிற்கு இன்று காலையில் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அவருடைய மனைவி கண்ணீரோடு பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
"நிழல்கள்" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ராஜசேகர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று பன்முக திறமையோடு திகழ்ந்து வந்தார். பல சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் அவர் காலமானார். அதற்கு முன்பு அவர் தன்னுடைய மனைவிக்காக சொந்தமாக ஒரு வீடு ஒன்றை லோன் போட்டு வாங்கி இருந்தார்.

நடிகர் ராஜசேகர் முதல் மனைவி
ஆனால் அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் வைப்பதற்கு முன்பே ராஜசேகர் காலமாகிவிட்டார். அவர் மறைந்த இரண்டாவது மாதத்திலேயே வங்கியில் இருந்து கடனை கட்ட சொல்லி அவருடைய மனைவி தாராவிடம் வங்கி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுகுறித்து ஏற்கனவே தாரா ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில், "என்னுடைய கணவர் நடிகை சரண்யாவை தான் முதலில் திருமணம் செய்திருந்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடல் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
பலருக்கு உதவி
பிறகு என்னுடைய கணவர் அவருடைய குடும்பத்தினர் சகோதரிகளுக்காக தன்னுடைய மொத்த வருமானத்தையும் செலவழித்து விட்டார். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட போது எனக்காக எதுவும் இல்லை என்பதற்காகத்தான் அவருடைய வயதான காலத்தில் எனக்காக ஒரு வீடு வாங்கினார். என்னுடைய காலத்திற்கு பிறகு நீ தெருவில் நிற்க கூடாது என்று சொல்லி இருந்தார். சினிமாவில் அத்தனை பேருக்கு என்னுடைய கணவர் சாப்பாடு போட்டு இருக்கிறார். ஆனால் என்னுடைய கணவர் இறந்த பிறகு எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.
நடிகர் சங்கம் உதவி இல்லை
அவர் இருந்த வரைக்கும் சின்னத்திரை வெள்ளித்திரை என்று சினிமா சங்கங்களிலும் இருந்தார். ஒளிப்பதிவாளர் சங்கங்களிலும் இருந்தார். ஆனால் என்னுடைய கணவர் இறந்த பிறகு எல்லா சங்கங்களுக்கும் நான் உதவி கேட்டேன். யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருடைய வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. தாரா தரப்பில் கடனை செலுத்தாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்கள்.
நடிகர் ராஜசேகர் மனைவி உருக்கம்
வங்கி ஏற்கனவே இந்த வீட்டை ஒருவருக்கு விற்பனை செய்திருக்கிறது. வாங்கிய நபர் வீடு தனக்கு கிடைக்காததால் அவர் கோர்ட் போயிருக்கிறார். கோர்ட் காவல்துறைக்கும் வங்கி நிர்வாகத்திற்கு வீட்டை கையகப்படுத்தி தர உத்தரவு போட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு தாரா தடையாக இருந்திருக்கிறார். ஆனால் இன்று காலையில் அந்த வீட்டிற்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்திருந்த நிலையில் தாரா பேசும் போது எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல, நடுரோட்டில் இருக்கிறேன் நடிகர் சங்கம் டிவி, நடிகர் சங்கம் யாராவது உதவி செஞ்சா நல்லா இருக்கும் என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications