ராஜேஷின் கத்தி மேல் நடக்கும் சவால் கேரக்டர்.. ரியல் எஸ்டேட்டிலும் சக்ஸஸ்.. பிரமிப்பு நடிகர்: பிரபலம்
சென்னை: ஆர்.சி. சக்தியின் "சிறை" என்ற படத்தில், சிறப்பாக நடித்திருப்பார் ராஜேஷ்.. ஒரு ரவுடி, அனைவரும் பார்த்து பயந்து நடுங்கக்கூடிய வில்லன், கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறந்து, பிறரின் அனுதாபத்தை அள்ளுகிறான்.. கத்தி மேல நடக்கும் இந்த கேரக்டரில் மிக கச்சிதமாக செய்திருந்தார் ராஜேஷ்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் புகழாரம் சூட்டியிருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Reflect Lifestyle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "75 வயதாகிவிட்டது.. வயது மூப்பு காரணமாக மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரத்தான் செய்யும்..
சமீபகாலமாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கி கிடந்தார்.. சினிமா ஆளுமைகளை நிறைய பேட்டிகள் எடுத்தார்.. பிறகு மருத்துவர்களை அழைத்து நேர்காணல் கொண்டிருந்தார்.. அவருக்கே கூட நிறைய மருத்துவ பிரச்சனைகள் உடம்பில் இருந்திருக்கலாம்..

மனைவி பற்றி உருக்கம்
சினிமா பிரபலங்களிலிருந்து, திடீரென மருத்துவர்களின் பக்கம் கவனத்தை செலுத்தியது காரணம் தெரியவில்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் தன்னுடைய கடமையை சரியாக செய்துள்ளார்.. மனைவி குறித்தும் நிறைய உருக்கமாக பேசியிருக்கிறார்.. மனைவி இல்லாத வாழ்க்கை தனித்துவிடப்பட்ட ஒன்று என்பதை பல நேர்காணல்களில் சொல்லி வந்துள்ளார்..
தனிமை என்பது கொடுமையானது.. சோஷியல் மீடியாதான் ராஜேஷூக்கு சப்போர்ட்டாக இருந்து வந்திருக்கிறது.. நிறைய பேட்டிகளை எடுப்பது, அந்த வீடியோக்களை எடிட் செய்து வெளியிடுவதெல்லாம்கூட ராஜேஷூக்கு அழுத்தத்தை தந்திருக்கலாம்.
ஆனால் சினிமா வாழ்க்கை, அவரது வெற்றிகரமான வாழ்க்கையாக அமைந்தது..
சவாலான கேரக்டர்
கே பாலச்சந்தர் படமான அவள் ஒரு தொடர்கதையில் அறிமுகமானாலும், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.. அந்த 7 நாட்கள் படத்தில், கதாநாயகனை கடந்து மனதில் நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.. கன்னிப்பருவத்திலே படத்தில் ஆண்மையிழந்த கணவனாக நடித்திருப்பார். .
இந்த கேரக்டரில் நடிக்க பலரும் தயங்குவார்கள்.. தங்களுடைய ஹீரோயிசத்தை நினைத்து, அடுத்தடுத்த படங்கள் வராமல் போகுமே என்று நினைத்து பயப்படுவார்கள்.. ஆனால் ராஜேஷ் துணிச்சலாக அந்த கேரக்டரில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க தன்னுடைய நடிப்பின் மீது நம்பிக்கை உள்ள நபர்களால் மட்டுமே இதுபோன்ற சவாலான கேரக்டர்களை ஏற்று நடிக்க முடியும்.
ரியல் எஸ்டேட் பிசினஸ்
அதேபோல ஆர்.சி. சக்தியின் "சிறை" என்ற படத்தில், சிறப்பாக நடித்திருப்பார்.. ரவுடி, வில்லனாக காட்டி, நோய்வாய்ப்பட்டு இறந்து, அனுதாபத்தை அள்ளும் காட்சியில் நடித்திருப்பார்.. கத்தி மேல நடக்கும் இந்த கேரக்டரில் மிக கச்சிதமாக செய்திருந்தார் ராஜேஷ்..
ராஜேஷூக்கு இயல்பாகவே கேட்புத்திறன் வாசிப்புத்திறன் அதிகம்.. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டவர்.. ரியல் எஸ்டேட் பிசினஸ் தானாகவே அவருக்கு அமைந்துவிட்டது.. பல நடிகர், நடிகைகளுக்கு வீடுகளை வாங்கி தந்திருக்கிறாராம்.. வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு நிறைய வாஸ்து ஐடியாக்களை இவரே சொல்வாராம்.
அறிவார்த்தமானவர்களிடம் பேட்டி
சினிமாவில் சாதாரணமானவர்கள், சர்ச்சைக்கு ஆளாகுபவர்களை யூடியூப்களில் ராஜேஷ் பேட்டி எடுத்ததில்லை... எப்பாதுமே சாதனை படைத்த, அறிவார்த்தமானவர்களையே பேட்டி எடுத்திருந்தார்..
கடைசி கட்டத்தில்தான் மருத்துவர்களை கொண்டுவந்து நேர்காணல்களை அதிகமாக செய்து வந்தார்.. டாக்டர்களை வைத்து நேர்காணல் செய்வதால், கமர்ஷியலாக வியாபாரம் வராது என்று தெரிந்தாலும், சமூகத்தில் மக்களுக்கு அந்த வீடியோக்கள் உபயோகமாக இருக்கும் என்று நினைத்து செய்திருக்கலாம்.. அல்லது நோய்கள் குறித்த தனக்கான சந்தேகங்களையும் டாக்டர்கள் மூலம் தெரிந்து கொள்ள நினைத்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications