ரஜினி முதலமைச்சர் காலில் விழுந்ததை விடுங்க..“ பாக்கியலட்சுமி” கோபி சொன்ன விளக்கத்தை கேட்டீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்கியது குறித்து வெளியாகி வரும் கருத்துக்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

actor Rajinikanth falling down at the feet of the Chief Minister so Baakiyalakshmi Serial Gopi comment

நடிகர் ரஜினிகாந்த் பற்றி சீரியல் நடிகர் சொன்ன கருத்து வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக பலருடைய ஃபேவரைட் நடிகராக இருக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆதரவாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் பற்றி தான் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து இருப்பதாக ஒரு பக்கம் அவர் தரப்பு ரசிகர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த ரஜினி அதற்குப் பிறகு பல அரசியல்வாதிகளையும் ஆன்மீக குருக்களையும் சந்தித்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் உத்தரபிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு முதல்வர் யோகி ஆனந்தை பார்த்தவுடன் அவருடைய காலில் விழுந்து வணங்கி இருந்தார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் நடிகர் ரஜினிகாந்த் நான் யாருடைய காலில் விழமாட்டேன் என்று பேசிய பழைய வீடியோக்கள் எல்லாம் ட்ரண்ட் ஆகி மீண்டும் இணையத்தில் கேளிக்கையாக கிண்டல் செய்யப்பட்டு வந்தது.

actor Rajinikanth falling down at the feet of the Chief Minister so Baakiyalakshmi Serial Gopi comment

அதே நேரத்தில் 72 வயதான ரஜினிகாந்த் 51 வயதான யோகி ஆனந்தின் காலில் விழுந்தது முறையல்ல என்று பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் நான் சொல்ல போறது யாரும் ரியாக்ட் பண்ணாதீங்க. ரெண்டு மூணு நாளா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் ஏன் இதை இவ்வளவு பெரிய விஷயமா எடுத்துக்கிறாங்க..? சூப்பர் ஸ்டாரை தாக்கி பேசுறாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்தா தெரியும். ரஜினி சார் அவருடைய வீட்டில் சாதாரண ஒரு நபராக இருக்கிறார். ஆனால் ரசிகர்களின் மனதில் ரஜினி சார் ஒரு கெத்து சூப்பர் ஸ்டார் என்று தலைமேல வச்சு தூக்கி கொண்டாடிகிட்டு இருக்கோம்.

அப்படிப்பட்ட ஒரு தலைவன் நம்ம மனசுல இருக்கிற நிலையில், இன்னொருத்தர் காலில் அதுவும் வயசு குறைந்தவங்க காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்குவது பிடிக்கல. அந்த கோபத்தில் தான் இந்த மாதிரி எல்லாம் ஓடிக்கிட்டு இருக்குது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+