மயில்சாமி மகனுக்கு இப்படி ஒரு அவமானமா? அதுவும் ரஜினியின் முன்னாடியே! ஆனால் கடைசியில் தான் அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தன்னை விரும்புபவர்களை பற்றி எப்படி தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதுவும் தன் மீது அதிகப்படியான பாசமும் மரியாதையும் வைத்திருந்த மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ரஜினி செய்த செயல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதாவது நடிகர் ரஜினிகாந்தை அதிகமானோர் ரசிக்கலாம். ஆனால் மயில்சாமியை பொறுத்தவரையில் ரஜினி ஒரு மாமேதையாக தான் அவருக்கு தெரிந்தார். ரஜினி மீது அலாதி பற்று கொண்டவராகவும் மயில்சாமி இருந்தார். அதனால் தான் தான் மறைவதற்கு முன்பு கூட ரஜினிகாந்த் கோவிலுக்கு போயிட்டு வர வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதுபடியே மயில்சாமி மறைவிற்குப் பிறகு ரஜினியும் செய்து இருந்தார். இந்த நிலையில் மயில்சாமி மகனுக்கு தன் முன்பு நடந்த அவமானத்தின் போது ரஜினிகாந்த் செய்த செயல் மயில்சாமியின் மகனை மனம் குளிர வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் மயில்சாமி சில மாதங்களுக்கு முன்புதான் காலமானார். இரவு முழுக்க கோவிலில் பஜனையிலிருந்து விட்டு காலையில் வீட்டிற்கு வந்த நிலையில் உடல் அசவுகரியம் ஏற்பட அதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அங்கேயே அவருடைய உயிர் பிரிந்து இருந்தது. இது அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
அதில் பெரிய அளவில் அதிர்ச்சி நடிகர் ரஜினிகாந்த்தும் தான். காரணம் ரஜினிகாந்தின் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் மயில்சாமி வைத்திருந்தாராம். மயில்சாமி யாருக்கேனும் உதவி செய்வதற்கு தன்னிடம் சில நேரங்களில் வசதி இல்லாமல் போயிருந்தால் கூட உரிமையாக ரஜினிகாந்திடம் கேட்டு வாங்கி உதவி செய்ததாக அவரே கூறி இருந்தார்.
இந்த நிலையில் மயில்சாமியின் மறைவு திரை உலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மயில் சாமியின் மகன் திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார். அதுவும் லால் சலாம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறாராம். ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறாரம் அப்போதுதான் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அதாவது ரஜினியின் உதவியாளரான சுப்பையா மயில்சாமியின் மகனிடம் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ரஜினியை பார்த்தாயா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு மயில்சாமியின் மகன் ஆமாம், ஆனால் அவர் பிஸியாக இருக்கிறார் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று சொல்ல அதற்கு உதவியாளர் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு ரஜினியின் முன்பு மயில்சாமியின் மகனை நிறுத்தி இருக்கிறார்.
உடனே ரஜினியை பார்த்து சுப்பையா இவர் யாரென்று தெரிகிறதா? உங்க கூட கபாலி படத்தில் நடித்தாரே தினேஷ் அவர்தான் என்று சொல்லி இருக்கிறார். அதை கேட்டு மயில்சாமியின் மகன் அதிர்ச்சியில் நின்று இருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் சிரித்தபடியே இது மயில்சாமியின் மகன் என்று சொன்னாராம். அதை கேட்டு மயில்சாமி மகனுக்கு ஏதோ விருதே கிடைத்த ஒரு சந்தோஷம் இருந்திருக்கிறது.
காரணம் தன்னை ரஜினிகாந்த் இவ்வளவு ஞாபகம் வச்சு இருக்கிறாரே என்று அவர் ஒரு நிமிடம் வியந்து விட்டாராம். அட்டகத்தி தினேஷின் முக சாயலில் மயில்சாமி மகன் இருக்கிறார் என்று ரஜினிகாந்தின் உதவியாளர் இவர் தினேஷ் என்று தவறாக நினைத்து தான் ரஜினியின் முன்பு கூட்டிட்டு போயிருக்கிறார். ஆனால் தன்னை பற்றி ரஜினிகாந்த் இவ்வளவு ஞாபகம் வைத்திருப்பதை பார்த்து மயில்சாமியின் மகன் மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார்.
அதுபோல மயில்சாமி மகன் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தங்க மகள் என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். வெள்ளி திரையில் பெரிய அளவில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்ன திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி இனி வெள்ளி திரையில் கலக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கும் இவருக்கு அதிகமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
