Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ எந்த ஜாதி? அப்போ நீ “அந்த” ஆளு இல்லையா? முனீஸ் ராஜாவின் ஆடியோவை வெளியிட்ட ராஜ்கிரண் மகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகராக இருக்கும் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் பிரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டேன் என்றும் தங்களுடைய பிரிவுக்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு ஆரம்பத்திலேயே தன்னுடைய வளர்ப்பு தந்தை என ராஜ்கிரண் முனீஸ் ராஜாவை திருமணம் செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நான் கேட்காமல் திருமணம் செய்ததால் முனீஸ் ராஜாவிடம் அடி உதை வாங்கி இருக்கிறேன். அதுபோல அவர் என்னுடைய ஜாதியை கேட்டும் என்னை மிரட்டி இருக்கிறார் என்றும் பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு முனீஸ் ராஜா பேசிய சில ஆடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

Actor Rajkiran daughter Priya released the audio of Muneez Raja

அந்த வகையில் ராஜ்கிரண் மகள் பிரியா மற்றும் முனீஸ் ராஜா இருவரும் பிரிந்து இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராஜ்கிரண் வளர்ப்பு மகளான பிரியா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து விட்டேன் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது குறித்து அந்த நேரத்தில் ராஜ்கிரண் இனி பிரியாவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பிரியா என்னுடைய சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் தான் நான் ஆனால் அவரை என்னுடைய சொந்த மகள் போல வளர்த்தேன் ஆனால் இப்போது அவர் வீட்டை விட்டு போய்விட்டார். அவர் திருமணம் செய்திருக்கும் அந்த சின்னத்திரை நடிகர் பிரியாவை பணத்திற்காக தான் ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் என்று ஒரு பெரிய பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார்.

ஆனால் முனீஸ் ராஜாவும் ப்ரியாவும் அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் எங்களை குறைவாக பேசுபவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்று பேசி இருந்தனர். அது போல ஜீ தமிழில் இவர்களுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்திருந்தனர். பல பேட்டிகளிலும் இருவரும் கலந்து கொண்டு இருந்தனர். இப்படியான நிலையில் சில மாதங்களாக இவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது சில நாட்களுக்கு முன்பு திடீரென்று பிரியா கை எடுத்து கும்பிட்டு ஒரு வீடியோ போட்டு இருந்தார்.

அதில் தான் முனீஸ் ராஜாவை சில மாதங்களுக்கு முன்பே பிரிந்து விட்டேன். அதற்குப் பிறகு என்னுடைய வளர்ப்பு தந்தை தான் நான் செய்த தவறை மன்னித்து எனக்கு பண உதவியும், மருத்துவ உதவியும் செய்து இருக்கிறார் என்று அதில் பேசியிருந்தார். இந்த நிலையில் அதை தொடர்ந்து ஒரு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் முனீஸ் ராஜாவை தான் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி பேசி இருக்கிறார்.

அதில் என்னுடைய தந்தை எவ்வளவோ சொல்லியும் நான் கேட்காமல் முனீஸ் ராஜாவை திருமணம் செய்தேன். ஆனால் இன்று அதற்காக வருத்தப்படுகிறேன். திருமணமான கொஞ்ச நாளில் அவருடைய சுயரூபம் தெரிந்தது. பிறகு அவரை விட்டு பிரிந்துவிடலாம் என்று யோசித்த போது எல்லாம் அவர் என்னை சார்ந்தவர்களையும் என் அம்மாவையும் அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டினார்.

அதோடு அவர் நன்றாக குடிப்பார் குடித்துவிட்டு என்னை வந்து அடிப்பார். ஒரு கட்டத்தில் அவருடன் என்னால் வாழ முடியாது அதனால் பிரிந்து வந்து விட்டேன் அவரோடு நான் இருக்கும் போது என்னை சார்ந்தவர்களிடம் பணம் வாங்கிட்டு வரச் சொல்லி என்னை மிரட்டி கொண்டு இருந்தார். அதோடு என்னுடைய ஜாதியை கேட்டும் என்னை பிரச்சனை பண்ணினார். நீ தேவர் ஜாதி இல்லையா? என்று என்னிடம் கேட்டார். நீ என்ன ஜாதி என்று கேட்காமல் நான் கல்யாணம் பண்ணுனது தப்பு என்றும் அதில் பேசியிருந்தார்.

அதோடு அவருடைய எக்ஸ் லவ்வரிடம் டெய்லி போன் பேசிட்டே இருப்பார். அப்போது வெட்கமே இல்லாம அவரிடம் ஐ லவ் யூ சொல்லி பேசிட்டு இருப்பாரு. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. என் கல்யாணம் நடந்த பிறகு நிறைய மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. முதலில் என்னுடைய கணவர் சொன்னது போலத்தான் நான் எல்லா விஷயத்தையும் செய்தேன்.

அவர் எனக்கு நல்லது செய்வதாக எண்ணி என்னுடைய அப்பாவுக்கு எதிராகவே நான் பேசினேன். எங்க கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசத்திலேயே நிறைய பிரச்சனை ஆரம்பம் ஆனது அதை சரி செய்ய நினைத்தோன். ஆனால் எதுவும் நடக்கல என்று அந்த பேட்டியில் பிரியா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+