டி.ராஜேந்திரன் கேரக்டரே வேற! 200 கோடி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டார்! ராமராஜன் ஓப்பன் அப்
சென்னை: நடிகர் ராமராஜன் திரைத்துறையில் தான் வியந்து பார்த்த நடிகர்களில் டி. ராஜேந்திரனும் ஒருவர் என்று அவரை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கருத்துக்களையும் பெற்று வருகிறது.
இந்த வகையில் சினிமா துறையில் நடிகர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் புகழின் உச்சத்தில் வலம் வந்த ராமராஜன் பல வருடம் கழித்து இப்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் நடித்த சாமானியன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தொடர்ச்சியாக பல youtube சேனல்களுக்கு தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் நடிகர் டி. ராஜேந்திரன் குறித்து வெளிப்படையாக பேசுகிறார். அதில் ராமராஜன் பேசுகையில் நான் சினிமாவில் வியந்து பார்த்த நடிகர்களில் டி ராஜேந்திரனும் ஒருவர். அவர் எல்லா நடிகர்களை விடவும் வித்தியாசமானவர். நான் சினிமாவில் ஒரு கதாநாயகியோடு தான் நடிப்பேன் என்று ஒரு சபதத்தோடு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ராஜேந்திரன் எந்த நடிகையும் தொட்டு நடிக்க மாட்டேன் என்று பெரிய அளவில் ஒரு சபதத்தை போட்டு அதை இத்தனை வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் பெரிய விஷயம். 200 கோடி கொடுத்தாலும் சரி நான் கதாநாயகியை தொட்டு நடிக்க மாட்டேன் என்று அவர் வெளிப்படையாகவே கூறி விடுவாராம். இந்த விஷயம் எனக்கு பிறகு தான் தெரியவந்தது. அதற்கு பிறகு நானும் அவருடைய படத்தில் பார்த்தேன். ஆனாலும் நான் இந்த விஷயத்தை இத்தனை வருஷமாக கவனிக்காமல் விட்டு விட்டேனே என்று எனக்கே தோன்றியது.
அதுபோல ராஜேந்திரனைப் போல யாராலும் பேச முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும் அவருடைய நடிப்பு, பேச்சு, இயக்கம் எல்லாமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் தான் இருக்கும். அதனால் எனக்கு ராஜேந்திரனை எப்போதும் பிடிக்கும். அவர் எல்லா படங்களிலும் தாடி வைத்து நடிப்பார் என்றால் தாடி இல்லாமல் நடிப்பேன். இதுவரைக்கும் நான் நடித்த எல்லா படங்களிலும் தாடி இல்லாமல் தான் நடித்திருக்கிறேன்.
ஆனால் இப்போதுதான் சாமானியன் திரைப்படத்தில் தாடி வளர்க்க வேண்டும் என்று கட்டாயமாக சொன்னார்கள். அதனால் நான் அப்படி நடித்திருந்தேன். அதுபோல சாமானியன் திரைப்படத்தில் நான் கலர் சட்டைக்கு பதிலாக வெள்ளை சட்டை போட்டு தான் நடித்திருக்கிறேன்.
நான் சட்டை போடாமல் நடித்தால் கூட என்னுடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் வெள்ளை சட்டை போட்டு நடிப்பதை ஏற்றுக் கொள்வார்களா? என்று எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது தான். ஆனால் இப்போது மக்கள் எனக்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது அந்த பயம் எல்லாம் போய்விட்டது என்று அந்த பேட்டியில் ராமராஜன் மேலும் பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications