நடிகர் ராமராஜனின் மகள் மற்றும் மகன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? நளினி கொடுத்த அப்டேட்
சென்னை: நடிகர் ராமராஜன் மற்றும் நளினி காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் இப்போதும் நான் ராமராஜனை காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட நடிகை நளினி பேசியிருந்தார்.
இந்த நிலையில் நளினி, மகள் மற்றும் மகன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் சில கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஆடை, அழகு எல்லாம் நடிப்புக்கு தேவையே இல்லை என்று புரட்சியை செய்தவர்தான் நடிகர் ராமராஜன் இவர். ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமான காலகட்டத்தில் நடிகர் ரஜினி, கமல்ஹாசன் போன்றோர் பிரம்மாண்டமாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தனர்.
ஆனால் அரைக்கால் டவுசர் ரோடு படம் முழுக்க வலம் வந்து அதிகமான ரசிகர்களை தன் பக்கம் திருப்பிய பெருமையை ராமராஜனுக்கு தான் சேரும். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த ராமராஜன் அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல ராமராஜனே பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியும் இருந்தார்.
நடிகர் ராமராஜன் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சின்ன ஊரில் பிறந்து அங்கிருக்கும் சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழித்துக்கொண்டு இருந்த வேலை மற்றும் வாழை இலை விற்பனை செய்வது போன்ற வேலைகளை பார்த்து, பிறகு சென்னைக்கு வந்து சினிமா இயக்குனராகவும் பிரபலமான நடிகராகவும் மாறி பலருக்கும் ரோல் மாடலாகவும் மாறி இருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகை நளினியை காதலித்து திருமணமும் செய்திருந்தார்.
இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு நளினி மற்றும் ராமராஜனுக்கு அருண் மற்றும் அருணா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது. ஆனாலும் சில வருடங்கள் கழித்து சில காரணங்களால் இருவரும் மனம் ஒத்து போய் விவாகரத்து செய்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதில் அருணுடைய கல்யாணத்தை நளினி மற்றும் ராமராஜன் இருவரும் சேர்ந்துதான் நடத்தி வைத்திருந்தனர்.

அருண் மற்றும் பவித்ராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சென்னையில் வைத்து திருமணம் நடந்தது. மேலும் ராமராஜனின் மகளான அருணா பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நடிகை நளினி தன்னுடைய மகள் மற்றும் மகனோடு சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி அதே நேரத்தில் இந்த அழகான குடும்பத்தில் ராமராஜனும் இணைந்து இருக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களையும் கூறி வருகிறார்கள்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications