எம்ஜிஆரின் வளர்ப்பு என்பதை நிரூபித்த ராமராஜன்.. அமுதவாணனுக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் அமுதவாணுக்கு தன்னுடைய மோதிரத்தை பரிசாக வழங்கியிருக்கிறார்.
சென்னை: முதல் முறையாக சின்னத்திரையில் நடிகர் ராமராஜன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 4இல் சிறப்பு விருந்தினராக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டிருக்கிறார்.
தன்னைப் போலவே பர்பாமன்ஸ் செய்த அமுதவாணனை பாராட்டி தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தை பரிசாக நடிகர் ராமராஜன் வழங்கி இருக்கிறார்.

சின்னத்திரையில் ராமராஜன்
இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக சின்னத்திரைக்கு நடிகர் ராமராஜன் வந்திருக்கிறார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் காதல் ரவுண்டு நடைபெற்று வருகிறது. அதில் அமுதவாணன் ராமராஜனை போலவே ஆடி காட்டி அனைவரையும் மகிழ்வித்து இருக்கிறார். முதல்முறையாக இதை பார்த்து ரசித்த நடிகர் ராமராஜன் அமுதவாணனை பாராட்டி தன் தன்னுடைய கையில் இருந்த R என்ற இன்ஷியல் போட்ட தன்னுடைய மோதிரத்தை அமுதவாணனுக்கு அணிவித்திருக்கிறார்.

நான்காவது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அமுதவாணன், வடிவேல் பாலாஜி சிங்கப்பூர் தீபன், புகழ், பாலா, ராமர், நாஞ்சில் விஜயன், தங்கதுரை போன்ற பல கலைஞர்கள் பிரபலமானார்கள். இந்த நிகழ்ச்சியில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் தான் தற்போது நான்காவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது. தொடங்கி இரண்டாவது வாரத்தில் முதல் முறையாக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டிருக்கிறார். 90களில் முன்னணி நடிகராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவருடைய ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

மீண்டும் திரைப்படத்தில்
நடிகர் ராமராஜன் 1977 ஆம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க தொடங்கினார். பிறகு நம்ம ஊரு நல்ல ஊரு என்கிற படத்தில் 1986 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களையும் ராமராஜன் இயக்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார். அதுவும் குறிப்பாக எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராகவும் அவரை பின்பற்றும் ஒரு நபராகவும் அந்த காலத்தில் இருந்தே ராமராஜன் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித் திரையில் புது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மோதிரம் பரிசு
நடிகர் ராமராஜன் நடித்துக் கொண்டிருக்கும் சாமானியன் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான பிரமோஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சீசன் நான்காவது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரைப் போலவே "மதுர மரிக்கொழுந்து" பாடலுக்கு அமுதவாணன் டான்ஸ் ஆடி காட்டுகிறார். மேலும் இந்த பாட்டுக்கு நீங்கள் எத்தனை முறை டான்ஸ் ஆடி இருப்பீர்கள் என்று ராமராஜனிடம் அமுதவணான் கேட்க அதற்கு அவர் ஒரே முறை தான் நடனமாடினேன் என்று பதில் சொல்ல, ஆனால் நான் பல இடங்களில் உங்களை போல் நடனமாடி பரிசுகளை பெற்று இருக்கிறேன். சொந்தமாக ஒரு வீட்டையே இந்த பாட்டால் கட்டி இருக்கேன் என்றால் பார்த்துக்கோங்க என்று சொல்ல, இதை பார்த்து மகிழ்ந்து போன ராமராஜன் தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி அமுதவனனுக்கு அணிவிக்கிறார். இந்த பிரமோ தற்போது வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications