“அந்த” படத்தில் ஊர்வசி நடிக்க கூடாது என்று மிரட்டிய ரஜினி.. காரணம் இதுதான்! இப்படியும் யோசிப்பாரா?
சென்னை: நடிகர் ரஜனிகாந்த் தான் நடித்த திரைப்படம் ஒன்றில் நடிகை ஊர்வசி நடிக்க வேண்டாம் என்று மறுத்ததாக இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அது எந்த திரைப்படம்? என்ன காரணம்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகிறது. அதுவும் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது ஏதோ முதல் முறை பார்ப்பது போன்று ரசிகர்கள் மெய்மறந்து பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பலருடைய பாராட்டை பெற்ற படம் தான் முத்து திரைப்படம். முத்து திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற தொன்மாவியன் கொம்பாட்டின் என்ற படத்தின் ரீமேக் தான். அதோடு முத்து திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியானது.
இந்த திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அதுபோல ரகுவரன், சரத் பாபு, ராதா ரவி, செந்தில், வடிவேலு என்று பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். அதில் உள்ள காமெடி இப்போதும் பார்க்கும் ரசிகர்களை குபீரென சிரிப்பை ஏற்படுத்தி விடும்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தான் நடிகை ஊர்வசி ராதாரவியின் மகள் பத்மினி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை ரஜினிகாந்த் நடிக்க வைக்க கூடாது என்று முடிவாக சொல்லிவிட்டாராம். இது குறித்து ரமேஷ் கண்ணா பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் முத்து திரைப்படத்தில் நடிகர் ராதாரவியின் மகள் பத்மினி கேரக்டரில் ஊர்வசி தான் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஊர்வசியின் குறும்புத்தனம் மற்றும் விளையாட்டு தனமும் அந்த கேரக்டருக்கு கரெக்டாக இருக்கும் என்பதால் நான் மட்டும் அல்லாமல் உதவி இயக்குனர்கள் எல்லோருமே முடிவு செய்து இருந்தோம். ஊர்வசி நடிப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதால் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கலாம் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ரஜினிகாந்த் ஊர்வசி இந்த கேரக்டரில் நடிக்க கூடாது என்று சொல்லிவிட்டார்.
அதை ஊர்வசிக்கும் போன் பண்ணி நீ இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு காரணம் ஊர்வசி இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அவரை இப்படி துணை கேரக்டரில் நடிக்க வைப்பது சரியில்லை. படத்தில் பத்மினியின் கேரக்டர் அவ்வளவு முக்கியம் உள்ளதாக இல்லை. எனவே இந்த படத்தில் ஊர்வசி நடிக்க கூடாது என்று கரராக ரஜினிகாந்த் கூறிவிட்டார். அதனால் தான் ஊர்வசிக்கு பதிலாக நடிகை சுபாஸ்ரீயை அதே கேரக்டரில் நடிக்க வைத்தோம் என்று அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா பேசி இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications