நடிகைகள் சிதறி ஓடறாங்க.. ஷூட்டிங்கில் யாரது? லைட் கம்பிய கையிலெடுத்த விஜயகாந்த்.. ராம்கி நெகிழ்ச்சி
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவுநாளையொட்டி நடிகர்கள் பலரும், அவரை பற்றி பேசிவருகிறார்கள்.. அந்தவகையில், நடிகர் ராம்கியும் விஜயகாந்த் பற்றின பல்வேறு நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பேட்டியை விஜயகாந்த் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த நடிகர் ராம்கி, செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார்.. அதாவது, "விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன், செந்தூரப்பூவே படத்தில் இணைந்து நடித்தேன். அந்த படத்தில் அவரது கேரக்டர் "கேப்டன்"

அதனாலேயே படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் என்றே கூப்பிடுவோம்.. பிறகு கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு பொதுமக்களும், ரசிகர்களுமே கேப்டன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பின்நாளில் அப்படியே கேப்டன் விஜயகாந்த் ஆகிப்போனார்.
நடிகர்கள்: அந்த காலகட்டத்தில் எந்த பிரச்சனைக்கும் நடிகர்கள் போக மாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் மட்டும் பல பொது பிரச்சனைகளை கையில் எடுத்து போராட்டங்கள் செய்திருக்கிறார். நடிகர் சங்கத்திற்கு தலைவர் பொறுப்பை ஏற்று கலைநிகழ்ச்சிகள் செய்து நடிகர் சங்க கடனை எல்லாம் அடைத்தவர். திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை தந்தவர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
இந்நிலையில், indiaglitz.com யூடியூப் சேனலுக்கு ராம்கி ஒரு பேட்டி தந்துள்ளார்.. விஜயகாந்த் நினைவுகள் குறித்து ராம்கி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.. ஆபாவாணனின் "ஊமை விழிகள் படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அந்த படத்தில் விஜயகாந்த் தீனதயாளன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். பிறகு, அதே ஆபாவாணனின் செந்தூரப்பூவே படத்தில் நான் ஹீரோவாகவும், விஜயகாந்த் கேப்டனாகவும் நடித்திருந்தார். இந்த செந்தூரப்பூவே படத்திலிருந்துதான் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயர் வந்தது..
காமெடி ஆர்ட்டிஸ்ட்: ஒருநாள் சென்னை பீச் பக்கத்தில், மரத்தில் வீடு போன்ற செட்டப் அமைக்கப்பட்டு, ஷூட்டிங் எடுத்தோம். ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஷூட்டிங் எடுத்து கொண்டிருந்தோம். அந்த படத்தில் 2 காமெடி ஆர்ட்டிஸ்டுகள், தங்களுக்கு ஷாட் இல்லாததால், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த பகுதியிலேயே பீச் மணலில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். விஜயகாந்த் சார், எனக்குமான சீன்கள் மட்டும் ஷூட் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது, திடீரென 4 பேர் குடித்துவிட்டு மணலில் படுத்து கொண்டிருந்த 2 நடிகர்களை சீண்டி கலாட்டா செய்திருக்கிறார்கள்... அப்போது அந்த காமெடி நடிகர்களில் ஒருவர், இவர்களை தட்டிக்கேட்டு அடித்து துரத்திவிட்டார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, அந்த குடிகார நபர்கள், மிகப்பெரிய கும்பலை அந்த ஏரியாவிலிருந்து அழைத்து வந்துவிட்டார்கள்.
பெரிய லைட் கம்பி: ஷூட்டிங் ஸ்பாட்டில் எரிந்து கொண்டிருந்த லைட்டுகள் ஒவ்வொன்றையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதைப்பார்த்த விஜயகாந்த், உடனே கீழே இருந்த ஒரு பெரிய லைட் கம்பியை எடுத்துவந்து, அந்த கும்பலை விரட்டி விரட்டி அடித்தார்..
யாருடைய உதவியையும் எதிர்பார்த்து அவர் நிற்கவில்லை. தனி நபராகவே இறங்கி மொத்தபேரையும் அடித்து விரட்டினார்.. இதைப்பார்த்த அங்கிருந்த நடிகைகள் எல்லாம் பதறிப்போயிட்டாங்க.. இதை கவனித்த விஜயகாந்த், அவர்கள் எல்லாரையும் உடனடியாக அங்கிருந்து வண்டியில் ஏற்றி பாதுகாப்பாக கூட்டிட்டு போக சொன்னார்.. ஆனால், மறுபடியும் அந்த கும்பலை புரட்டி புரட்டி விளாசி எடுத்தார். அப்பறம் திருவான்மியூர் ஸ்டேஷன் வரை இந்த விவகாரம் சென்றது.
ராதாரவி : இந்த விஷயம் அதற்குள் ராதாரவிக்கு தெரியவரவும், அவரும் கிளம்பி வந்து, அந்த கும்பலிடம் பஞ்சாயத்து செய்தார். அப்போதுதான் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது, வெளியிலிருந்த வந்த கும்பல் என்று தெரியவந்தது.. கடைசியில் அந்த கும்பல் எங்களிடம் ரொம்ப குளோசாகிவிட்டது.. அந்த பக்கம் நாங்கள் எப்போது ஷூட்டிங் போனாலும், க்காட்சி அந்த கும்பல்தான் எங்களுக்கு பாதுகாப்பு தந்தார்கள்" என்று விஜயகாந்த் குறித்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications