நடிகர் டிஸ்கோ ரவீந்தர் இப்போ ஆளே மாறிட்டாரே! ஒரு தலை ராகம் பட நடிகரின் தற்போதைய நிலை!
சென்னை: 80ஸ்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான முகங்களில் நடிகர் ரவீந்தரும் ஒருவர். இன்றைய தலைமுறையினர் பலருக்கு அவரைப் பார்த்தால் உடனடியாக பெயர் நினைவுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவரது ஸ்டைலான நடிப்பு, வித்தியாசமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருந்தது.
இப்போது பல வருடங்களுக்கு பிறகு அவர் கொடுத்த ஒரு பேட்டி சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக ஒரு தலை ராகம் படத்தில் இளம் வயதில் பார்த்த அதே ரவீந்திரனா இது என்று பலரும் அவரது தற்போதைய தோற்றத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
ரவீந்திரன் சினிமா பயணம் சாதாரணமானது கிடையாது. அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற அவர் 1980ல் வெளியான ஒரு தலை ராகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோ ஷங்கரின் கல்லூரி நண்பராக நடித்திருந்தார். அப்போது அவர் நிஜத்திலும் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் படத்தை எடுக்க முடிவு செய்ததும் முதலில் இவரைத்தான் அந்த படத்தில் அவர் நடித்த கேரக்டருக்கு பிக்ஸ் பண்ணிவிட்டார்களாம்.

டிஸ்கோ ரவீந்திரன்
அதற்குப் பிறகுதான் ஹீரோ யாரு என்றே தேடினார்கள். காரணம் இவருடைய நிஜ கேரக்டருக்கு தகுந்த மாதிரி தான் அந்த படத்தில் அவருடைய கேரக்டர் இருக்குமாம். அதனால் இவர் அந்த கேரக்டருக்கு அதற்கு ஓகே என்று முதலில் இவரை செலக்ட் பண்ணி விட்டு தான் அடுத்த நடிகர்களை தேடி இருக்கிறார்கள். அந்த படத்தில் அவருடைய ஸ்டைலும் நடன அசைவுகளும் ரசிகர்களை கவனிக்க வைத்தது. குறிப்பாக 80ஸ்களில் டிஸ்கோ கலாச்சாரம் பிரபலமாக இருந்த காலத்தில் ரவீந்தரும் அந்த டிரெண்டிங் முக்கியமானதாக முகமாக மாறினார். அதனால் அவருக்கு டிஸ்கோ ரவீந்திரன் என்ற பெயரும் நிலைத்து விட்டது.
அடையாளம் கொடுத்த படங்கள்
ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ரவீந்திரன் பெரும்பாலும் ஹீரோவாக இல்லாவிட்டாலும் அவருடைய டான்ஸ் மற்றும் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ்க்கு காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை பெற்றார். அதிலும் சகலகலா வல்லவன், போக்கிரி ராஜா, தங்க மகன், பொய்க்கால் குதிரை, அடுத்த வாரிசு, வாழ்க்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
வாழ்க்கை படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் இவர் ஆடிய "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" பாடல் கூட இன்றைக்கும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. இவருக்கு டான்ஸ் மட்டும் அல்ல நெகட்டிவ் கேரக்டரிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மலையாள சினிமாவில் அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் அவரை வித்தியாசமான நடிகராக அடையாளப்படுத்தின. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தன்னை டான்சராகவும், வில்லனாகத்தான் பார்க்க விரும்பினர்கள் என்று தெரிந்த பிறகு அதிலேயே வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தேன் என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
அம்மாவுக்கு வருத்தம்
ஆனால் இவர் சினிமாவில் நடிப்பது அவருடைய அம்மாவுக்கு பிடிக்கவில்லையாம். காரணம் மலையாளத்தில் வெளியான "பப்பயுடெ ஸ்வந்தம் அப்பூஸ்" என்ற படத்தில் அவர் நடித்த கேரக்டரை பார்த்துவிட்டு சிலர் அவருடைய அம்மாவிடம் டாக்டர் நீங்க ரொம்ப நல்லவங்க ஆனா உங்க மகன் படத்தில் என்ன ஒரு கொடூரமான ஆளா இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் அந்த டாக்டர் அம்மா தன்னுடைய மகன் இதற்கு மேல் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
சினிமாவை விட்டு விலக காரணம்
அதனாலயே அந்த படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்ச நாள் விலகி இன்டீரியர் டிசைன் மற்றும் கட்டுமான துறையில் கவனம் செலுத்தினாராம். அதோடு சினிமாவை முழுமையாக விட்டு விடாமல் திரைப்பட விழாக்கள், திரைப்பட கல்வி மற்றும் விஷுவல் லிட்ரசி போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம். சமீபத்தில் கூட அவர் மலையாளத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தமிழில் அவர் 30 வருடங்களுக்கு மேலாக நடிக்கவில்லை.

மாறாத ஸ்டைல்
இந்த நிலையில் அவர் லேட்டஸ்ட் ஆக கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்ததும் அடையாளம் தெரியாத அளவிற்கு இவர் மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட கொடுத்து வருகிறார்கள். இப்போது கூட அந்த பேட்டியில் அவருடைய ஸ்டைல் இன்னும் மாறவில்லை என்பதையும் ரசிகர்களுக்கு கவனித்து மீண்டும் தமிழில் நடிக்க வாங்க பாஸ் என்று அழைப்பு கொடுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
