சன் டிவி பெரிய சீரியலில் சம்பளம் தரல! அங்கே இது தான் நடக்குது.. திடீரென சீரியலை விட்டு விலகிய நடிகர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் சில வாரங்களுக்கு முன்புதான் கதாநாயகன் சீரியலை விட்டு விலகி இருந்தார். அதற்கு அவர் தனக்கு பர்சனல் காரணத்தால் தான் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து வந்த நடிகரும் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
அதே நேரத்தில் தான் சீரியலில் இருந்து பர்சனல் காரணத்தால் விலகவில்லை என்றும் தனக்கு சீரியல் தரப்பினர்கள் சில மாதங்களாகவே சம்பளம் தரவில்லை என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை ரவி காந்த் வைத்திருக்கிறார் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் மலர் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகனாக அக்கினியும் அவருக்கு ஜோடியாக சித்தி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ப்ரீத்தி ஷர்மாவும் நடித்து வந்தனர். இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலின் கதாநாயகன் அக்னி தான் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ரவிகாந்த் என்பவரும் சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதோடு தான் சீரியலில் இருந்து விலகியது தன்னுடைய பர்சனல் காரணத்தால் என்று சில வதந்திகள் பரவி வருகிறது அது உண்மையை கிடையாது.

நான் விலகுவதற்கு சில காரணங்கள் உண்டு அது அட்மின் டீம் மற்றும் அக்கவுண்ட் டீம் தான். நான் போன் பண்ணாலும் அவர்கள் எடுக்கவில்லை. எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. அது பற்றி நான் விசாரிக்கும் போது அவர்கள் அதற்கு முறையான பதில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் தர வேண்டியது இருக்கிறது. அது பற்றி நான் பலமுறை கேட்டபோதும் கூட இன்று நாளை என்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை.

ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகன் கூட இந்த பிரச்சனையினால் தான் வெளியே போனார். அதற்குப் பிறகு இந்த சீரியல் தரப்பினர்கள் திருந்தாமல் எங்களுக்கு சம்பள பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சீரியலை விட்டு வெளியே போனதும் எனக்கு பதிலாக நடிக்க வைப்பதற்காக மூன்று நடிகர்களிடம் பேசி இருக்கிறார்கள்.

அதற்கு அந்த நடிகர்கள் யாருக்காக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ரவிகாந்துக்காக என்று சீரியல் தரப்பினார்கள் சொன்னதும் அவர்கள் அதிர்ச்சியாகி அவர் சீரியலை விட்டு அவ்வளவு சீக்கிரமாக வெளியே போக மாட்டாரே என்ன காரணம் என்று கேட்டதற்கு ரவி காந்துக்கு பர்சனல் பிராப்ளம் அதனால் தான் வெளியே போயிட்டார் என்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.
அதற்கு பிறகு அந்த மூன்று நடிகர்களுமே என்னிடம் ஃபோன் பண்ணி விசாரித்தார்கள். நான் உண்மையில் என்ன காரணம் என்பதை பற்றி அவர்களிடம் சொல்லி விட்டேன். அதனால் யாரும் தவறாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று ரவிகாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதோடு ஒரு வீடியோவும் வெளியிட்டு அதிலும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications