Kenisha: கெனிஷா கர்ப்பமாக இருக்கிறாரா? ஓபனா பேசிட்டாரே! ரவி மோகன் போஸ்டை பார்த்தீங்களா?
சென்னை: தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ரவி மோகன்(ஜெயம் ரவி), சமீபகாலமாகத் தன் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் வதந்திகள் மூலம் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். முதல் மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த பிறகு, ரவி மோகன் பாடகியும், ஹீலிங் தெரபிஸ்ட்டுமான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் நெருக்கம் காட்டினார். இப்போது கெனிஷாவைப் பற்றிப் பரவியுள்ள ஒரு வதந்திதான் கோலிவுட்டைச் சூடாக்கியுள்ளது.

யார் இந்த ரவி மோகன்
ரவி மோகன் 'ஜெயம்' படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். திறமையான நடிகராகவும், சமூகத்தில் நல்ல மனிதராகவும் அறியப்பட்டவர். ஆனால், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், திடீரென விவாகரத்து அறிவித்துத் தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கினார்.
இதையடுத்து, பாடகியும், ஆன்மீகச் சிகிச்சை நிபுணருமான கெனிஷா பிரான்சிஸுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கெனிஷா ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை தமிழர், தாய் ஆப்பிரிக்கர். பிரான்ஸில் பிறந்து வளர்ந்த கெனிஷா, படிப்பை முடித்த பின் பெங்களூரில் செட்டில் ஆனார். கெனிஷாவின் பெற்றோரும் பாடகர்களாம்.
கெனிஷாவுக்குப் பாட்டுப் பாடுவது, லத்தீன் நடனம் ஆடுவதுடன், ஸ்பிரிச்சுவல் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சை அளிக்கும் திறமையும் உண்டு. மன அழுத்தம், பதட்டம் போன்ற சிக்கல்களிலிருந்து குணமடைய இவர் சிகிச்சை அளித்து வருகிறார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
சமீபகாலமாக, ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கும் நிலையில், கெனிஷா கர்ப்பமாக இருப்பதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த வதந்திக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கெனிஷா பிரான்சிஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நான் கடைசியாகப் பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரியைப் பார்த்து, பலரும் நான் கர்ப்பமாக இருக்கின்றேனா என்று கேட்கின்றார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்பு தனது வயிற்றைச் சுட்டிக்காட்டி அவர், "ஆனால், என் வயிற்றைப் பாருங்கள்... அதில் சாப்பாடு மட்டுமே செல்கின்றது. நான் பிரெக்னன்ட் இல்லை. அது வேற ஒரு அனவுன்ஸ்மென்ட்!" என்று தெரிவித்து, பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ரவி மோகனின் விளக்கம்
ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் குறித்த காதல் வதந்திகள் பரவியபோது, ரவி மோகன் இதற்குப் பொதுவெளியில் விளக்கம் அளித்திருந்தார்.
அதில் அவர், "கெனிஷாவும் நானும் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வருகிறோம். எங்களது ஆன்மீக மற்றும் கலை ஆர்வம் எங்களை இணைத்தது. நாங்கள் இருவரும் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளோம்.கெனிஷா என்னுடைய வாழ்க்கையில் வந்த ஒளி என்று தான் சொல்ல வேண்டும் நான் கஷ்டத்தில் இருந்தபோது எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்தவர் அவர்தான் என்று பேசி இருந்தார்.
தற்போது கெனிஷா பிரான்சிஸ் வதந்திக்கு நேரடியாகப் பதிலளித்ததன் மூலம், ரவி மோகன் மற்றும் கெனிஷாவின் உறவு குறித்த யூகிப்புகள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது தங்கள் தயாரிப்பு நிறுவன வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் ரவி மோகன் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார். அதில் கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் நடந்து வரும்போது "அழகான மனைவி அன்பான துணைவி கிடைத்தால் பேரின்பமே" என்று பாடல் வரிகள் சேர்க்கப்பட்ட ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications