47 வயதில் தந்தையான நடிகர் ரெடின் கிங்ஸ்லி.. குழந்தையை கையில் வைத்து உருக்கமான போஸ்ட்
சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் சீரியல் நடிகையான சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இப்போது அழகான குழந்தை பிறந்து இருக்கிறது. அது குறித்து புகைப்படங்களை ரெடின் கிங்ஸ்லி பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் டோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரை கவர்ந்த கின்ஸ்லி அதற்கு பிறகு டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நெல்சன் இயக்குனர் அதிகமான படங்களில் மெயின் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகராவதற்கு முன்பு பிசினஸ்மேனாக இருந்தார். அதுபோல டான்ஸில் இவருக்கு அதிகமான ஆர்வம் இருந்ததால் டான்சராக இருந்து தான் நடிகராக மாறி இருக்கிறார். அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

ரகசியமான காதல்
45 வயது வரைக்கும் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் இவர் இனி திருமணம் செய்ய மாட்டார் என்ற கூட அவருடைய நண்பர்களே அவரை கலாய்த்து வந்தனர். ஆனால் சீரியல் நடிகையோடு இருந்த காதலை ரகசியமாக வைத்திருந்த ரெடின் தன்னுடைய திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
திடீர் திருமணம்
இந்த திருமணம் ரியலா? ரீலா என்று குழப்பத்தில் இருந்தபோது அது குறித்து சங்கீதா விளக்கம் கொடுத்திருந்தார். இது ரியல் போட்டோ தான் எனக்கும் ரெடின் கிங்ஸிலிக்கும் திருமணம் நடந்து விட்டது. அதுவும் மிகவும் எளிமையாக ஹைதராபாத்தில் உள்ள கோவிலில் நடைபெற்றது சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நேரடியாக சென்று நாங்கள் திருமணத்தை முடித்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

எளிமையான திருமணம்
அதற்குப் பிறகு இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் ரெடின் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்றதாக பல பேட்டிகளில் சங்கீதா கூறி இருக்கிறார்.
சீரியலில் இருந்து விலகல்
அதுபோல சங்கீதா திருமணத்திற்கு பிறகு சீரியல்களிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். அந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கர்ப்பமாக இருந்த போது அந்த சீரியலில் இருந்து அவர் விலகி இருந்தார்.

குழந்தையை கொஞ்சிய ரெடின்
அதற்கு பிறகு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ரெடீம் கிங்ஸ்லிக்கு இப்போது 47 வயதாகிறது. அதுபோல அவருடைய மனைவி சங்கீதாவிற்கு 46 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை நேற்று பிறந்து இருக்கிறது. இந்த தகவலை நேற்று சோஷியல் மீடியா பக்கங்களில் சங்கீதா பகிர்ந்து இருந்தார்.
குழந்தை பிறந்தது
அதைத் தொடர்ந்து ரெடீன் கையில் அந்த அழகான குட்டி குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் புகைப்படங்களை சங்கீதா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தங்களுக்கு வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் அளித்த அனைவருக்கும் நன்றி என்று சங்கீதா பகிர்ந்து இருக்கிறார்.
குவியும் வாழ்த்துக்கள்
கடந்த வாரத்தில் தான் சங்கீதாவின் வளைகாப்பு பங்க்ஷன் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ஆசீர்வாதம் அளித்திருந்தனர். இந்த நிலையில் வளைகாப்பு முடிந்த அடுத்த வாரத்திலேயே சங்கீதாவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதுபோல இந்த தம்பதிக்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications