கழுத்துல எனக்கு காயமே வந்துடுச்சு.. ஆனா அவங்க மைண்ட் அப்படித்தான்.. ரெடின் கிங்ஸ்லி மனைவி வருத்தம்
சென்னை: நேற்று நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை எளிமையான முறையில் திருமணம் செய்திருந்தார்
இதுவரைக்கும் தாங்கள் காதலித்த விஷயத்தில் மறைத்து வைத்திருந்த ரெடின் மற்றும் சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் சங்கீதா தான் நடித்த சீரியல் அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சமூக காலமாக அதிகமான திரைப்படங்களில் காமெடி நட்சத்திரமாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை நேற்று திருமணம் செய்திருந்தார் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்களுடைய திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
47 வயதில் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய திருமணத்தை எளிமையாக முடித்திருக்கும் நிலையில் அவருடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய நண்பர்கள் அவரை கலாய்த்தும் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர். இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி நடிகை சங்கீதா திருமகள் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அடிக்கடி போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கையில் தனது கேரக்டரில் உள்ள சிக்கல்கள் பற்றியும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றியும் பேசி இருக்கிறார்.
அதில் இப்போ தான் நான் நடித்ததில் ரீசண்டா ஒரு கல்யாணம் சீன் போச்சு பத்து நாளைக்கு அந்த நகைகள் எல்லாம் போட்டு இருந்ததுனால என்னுடைய கழுத்துல காயமே வந்துடுச்சு. அந்த சீனுக்கு ரொம்ப ஹார்டு வேர்க் போட்டு இருந்தேன்.. ஆனால் வெளியே இருந்து பார்க்கிறவங்க என்ன இவங்க வில்லி தானே எப்பவும் முறைச்சுக்கிட்டே இருக்காங்க என்பது போல தான் அவர்களுடைய மைண்ட் செட் இருக்கும்.

என்னுடைய அம்மா கூட நீ ஒரே மாதிரியான நெகட்டிவ் ரோல் பண்ணி நீ இப்போ ரொம்ப ரூடா இருக்க, எதற்கெடுத்தாலும் முறைக்குற, ஏன் இப்படி இருக்கிறா? என்று திட்டுவாங்க என்று கூறியுள்ளார். அதோடு அந்த பேட்டியில் சீரியல் என்றால் இப்படித்தான் நடிக்கணும் சினிமாவில் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நடித்துக் காட்டியிருந்தார்.
கூடவே எதிர்நீச்சல் சீரியல் பற்றியும் பேசி இருந்தார். அதில் இப்போ உள்ள சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியல் நிஜமாகவே நல்லா இருக்கு. அதுல நிறைய எதார்த்தமான விஷயங்கள் பெண்களைப் பற்றிய விஷயங்கள் அவங்களைப் பற்றி பேசுற ஒவ்வொரு டயலாக்கும் எதார்த்தமாக இருக்கு என்று பாராட்டி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications