ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி.. அட இப்படி ஒரு காரணமா? வெளிவந்த ரகசியம்
சென்னை: சமீபத்தில் திருமணம் செய்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதா கழுத்தில் இரண்டு தாலி இருக்கும் ரகசியம் குறித்து அவர்களுடைய திருமணத்திற்கு மேக்கப் செய்த பெண் சில ரகசியங்களை கூறியிருக்கிறார்.
ரெடின் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது இவருடைய திருமண ரகசியங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதோடு ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சங்கீதாவின் கழுத்தில் இரண்டு தாலி எப்படி வந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரெடின் கிங்ஸிலி மனைவியான சங்கீதா கழுத்தில் இருக்கும் இரண்டு தாலி குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த தம்பதியின் திருமணத்திற்கு மேக்கப் செய்த பெண் பிரபல சேனல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான காமெடி நடிகர் ஆக ரெடின் கிங்ஸிலி வலம் வருகிறார்.
இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்திலும் கிங்ஸ்லி நடித்து இருந்தார். முதல் திரைப்படத்திற்கும் இரண்டாவது திரைப்படத்திற்கும் அதிகமான மாற்றங்கள் இருந்தது.

ஆனாலும் இவருடைய காமெடி மற்றும் வித்தியாசமான பேச்சு வழக்கு பல தரப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது. டாக்டர் திரைப்படத்தில் ஆக்சனுக்கு இணையான காமெடி காட்சிகள் இருந்தது, அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த திரைப்படத்தில் யோகி பாபுவை கிங்ஸ்லி ஓவர் டேக் செய்திருந்தார் என்றே சொல்லலாம். டாக்டர் படத்தையே தொடர்ந்து அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் அவர் 45 வயதிற்கு மேல் இப்போதுதான் திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய மனைவி வேறு யாரும் இல்லை மாஸ்டர் திரைப்பட நடிகை சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும், ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருந்தார்.
மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். அதை தொடர்ந்து சுல்தான் திரைப்படத்திலும் வலிமை திரைப்படத்திலும் சங்கீதா நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் மைசூரில் ஒரு படபிடிப்பு நடக்கும் இடத்தில் நடைபெற்று இருக்கிறது.

திரைப்படத்தில் பட குழுவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் எல்லோரும் இது சூட்டிங் திருமணம் என்று நினைத்திருந்தனர். பிறகு சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் பேட்டி ஒன்றில் சில தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதில் இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்ததில்லை. அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு இருந்ததால் அந்த இடைவெளியில் தான் திருமணம் நடந்தது.
ரெடின் கிறிஸ்தவர் என்பதால் அந்த தாலியும், சங்கீதா இந்து என்பதால் அந்த தாலியும் சங்கீதா கழுத்தில் அணிந்து இருந்தார். இருமுறை படி திருமணம் நடைபெற்றதாகவும் முதலில் இந்து கோவிலுக்கு சென்றும், பிறகு சர்ச்சில் வைத்தும் இரண்டு முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது. சங்கீதா திருமண புகைப்படங்களை டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
பிறகு தான் இவர்களுடைய திருமண விஷயம் பலருக்கும் தெரிந்தது. ஏற்கனவே புகழ் இதுபோலத்தான் இரண்டு முறையிலும் திருமணம் செய்திருந்தார். அதையே இப்போது ரெடின் கிங்ஸ்லியும் பாலோ செய்திருப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications