Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரியாஸ்கானின் மகனான ஷாரிக் கடந்த வருடத்தில் மரியா ஜெனிபர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் ஷாரிக் தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஷாரிக் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களும் அவருடைய குடும்பத்தினரும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ரியாஸ்கானும் ஒருவர். வின்னர் படத்தில் கட்டத்துரை என்ற கதாபாத்திரத்தில் பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு முன்பு சின்ன சின்ன கேரக்டரில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது வின்னர் திரைப்படம்.

Riaz Khan Shariq Vijay TV

அதற்குப் பிறகு இப்ப வரைக்கும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் ரியாஸ்கான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ரியாஸ் கான் போலவே அவருடைய மனைவி உமா ரியாஸ்கானும் சினிமா மற்றும் சீரியல் என்று நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஷாரிக் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷாரிக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய காதலியான மரியா ஜெனிபரை திருமணம் செய்து கொண்டார்.

மரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த மரியாவை குடும்பத்தினரின் சம்மதத்தோடு ஷாரிக் திருமணம் செய்து கொண்டார். இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் அதை பார்க்காமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் கூட விஜய் டிவியில் கம்பெனி நிகழ்ச்சியில் இவர்கள் குடும்பமாக கலந்து கொண்டு இருந்தார்கள். அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதே நேரத்தில் இப்போது ஷாரிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான பதிவு வெளியிட்டிருக்கிறார். அதாவது தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அதில் அறிவித்திருக்கிறார்.

இதற்காக பிரத்யேகமாக போட்டோ சூட் நடத்தி இருக்கிறார்கள். கையில் பிரக்னன்சி கிட் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட் போன்றவற்றை வைத்து இவர்கள் விதவிதமாக போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதில் ஷாரிக் தன்னுடைய மனைவிக்கு முத்த மழை பொழிந்து தன்னுடைய அன்பை பரிமாறி இருக்கிறார்.

இந்த வீடியோவிற்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதுபோல ஷாரிக் வெளியிட்ட பதிவுக்கு கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதுபோல மனைவி மரியா இப்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம். இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த இந்த ரகசியத்தை இப்போது பேபி பம்ப் தெரிய ஆரம்பித்ததும் புகைப்படங்களோடு ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+