ரியாஸ் கான் வீட்ல விசேஷம்.. அப்பா ஆக போகும் ஷாரிக்! கட்டதுரை ஹாப்பி அண்ணாச்சி! பப்லு வேற இருக்காரே!
சென்னை: சினிமா குடும்பமான ரியாஸ் கானின் வீட்டில் விசேஷம் நடந்திருக்கிறது ரியாஸ்கான் உமா ரியாஸ் தம்பதியினரின் மகனான மரியா ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமானதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாரிக் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பிரம்மாண்டமாக மருமகளுக்கு ரியாஸ்கான் குடும்பம் வளைகாப்பு நடத்திய நிலையில் பல பிரபலங்களும் நேரில் வந்து அவரை வாழ்த்தி இருக்கின்றனர் .
வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் மாறல என்பது ரியாஸ்கானுக்கு பொருந்தும். அவரது ஃபிசிக் பல முன்னணி நடிகர்களுக்கே வராதது. வின்னர் படத்தில் கட்டதுரை என்ற கேரக்டரில் நடித்து ரியாஸ்கான் பிரபலமான அதற்கு முன்னும் பின்னரும் பல படங்களின் அவர் நடித்திருக்கிறார்.

அவரது மனைவியான உமா ரியாசும் பலரும் அறிந்த நடிகை தான். மௌனகுரு, அன்பே சிவம், பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். உமா ரியாஸ் கானின் தாயாரான கமலா காமேஷ் பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.
ரியாஸ்கான் உமா ரியாஸ் தம்பதிக்கு ஷாரிக் ஹசன், சமர்த் ஹாசன் என இரண்டு மகன்கள், ஷாரிக் ஹாசன் பென்சில், டான் போன்ற படங்களில் நடித்ததோடு பிக்பாஸிலும் கலந்து கொண்டு பிரபலமானவர். கடந்த ஆகஸ்ட் மாதம் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து ஷாரிக் ஹாசன் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான மரியாவுக்கு எட்டு வயதில் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் 8 வயது மகளுடன் சிங்கிள் மதராக இருந்த தன்னை நல்ல தோழியாக ஏற்றுக் கொண்டதோடு மகளையும் கவனித்துக் கொண்டார் அதனால் தான் அவரை காதலித்தேன். அவர்களது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்த நிலையில் தற்போது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது என மரியா பேசியிருந்தார்.
இதற்கிடையே மரியா ஹசன் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரிக் ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று பிரம்மாண்டமாக மரியா ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடந்தது. இதில் சினிமா, சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
குறிப்பாக நடிகர் ரியாஸ்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான பப்லு ஜெனிஃபருக்கு ஒரு தந்தை போல நலங்கு வைத்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தாத்தா பாட்டி ஆகப்போகும் ரியாஸ் கான் உமா ரியாஸ், பெற்றோர் ஆகப்போகும் ஷாரிக் - மரியா தம்பதியினர்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications