Hema Committee: ஆண்களுக்கும் பாதுகாப்பு வேணும்! 2 வருஷம் முன்னாடி நடந்த சம்பவம்.. RK சுரேஷ் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்ட பிறகு அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ஆர் கே சுரேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது திரையுலகில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கேரளா சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது மலையாள சினிமா உலகில் பெண் நடிகைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை, சின்ன சின்ன கேரக்டரில் நடிப்பதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருக்கிறது என்று பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

hema committee rk suresh

இதனால் பல நடிகைகளும் இது பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சில நடிகைகள் இந்த மாதிரி பிரச்சனை மலையாள சினிமாவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இன்று காலை நடிகர் மற்றும் தமிழ் நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷால் தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்று விரைவில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தமிழ் நடிகைகளுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அவரிடம் மலையாள சினிமா உலகில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் பேசுகையில் இந்த மாதிரி பிரச்சனை மலையாள சினிமாவில் நடக்கிறது என்பது கடந்த வாரத்தில் வெளியே வந்திருக்கிறது. நானும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எப்போதும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது சிலர் சொல்கிறார்கள் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து தான் அதற்கு பிறகு கமிட்டி அமைத்து இது பற்றி விசாரிக்க தொடங்கி இருந்தனர். ஆனால் தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் நானும் இருந்தபோது விஷால் தலைமையில் தமிழ் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறதா என்று விசாரிப்பதற்காக ஒரு கமிட்டி தொடங்கப்பட்டது.

hema committee rk suresh

அந்த கமிட்டி இப்போதும் இருக்கிறது. சினிமாவில் பல விஷயங்கள் நடக்கிறது. சிலர் அட்ஜஸ்ட்மென்ட்ன்னு சொல்றாங்க சில அவங்களே ஒத்துழைச்சி சில விஷயங்களை செய்கிறார்கள் ஆனால் பிறகு சம்பந்தப்பட்டவர்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் இது முழுக்க முழுக்க தப்பான செயல்தான். பாதிக்கப்பட்டது எந்த பெண்ணாக இருந்தாலும் சரி அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது எல்லாருடைய கடமை இருக்கிறது.

அதுபோல பெண் நடிகைகளுக்கு எப்படி பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அதுபோல ஆண் நடிகர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பலர் கஷ்டப்பட்டு ஒரு இமேஜை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சிலர் தப்பு செய்திருக்கிறார்கள் ஆனால் சிலர் செய்யாமல் கூட அடுத்தவர்களால் குற்றம் சாட்டப்படலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உண்மை என்ன என்பதை கமிட்டி தான் தீர விசாரிக்க வேண்டும் என்று ஆர் கே சுரேஷ் பேசி இருக்கிறார்.

விஷால் இன்று பேசிய பேட்டியில் விரைவில் தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பிரச்சனைகள் பற்றி விசாரிக்க கமிட்டி தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆர் கே சுரேஷ் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கமிட்டி உருவாக்கப்பட்டு இப்போதும் அது விசாரிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லி இருக்கிறார். இது பற்றி உங்க கருத்து என்ன உரக்க சொல்லுங்க பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+