இந்திரஜாவின் குழந்தையை கையில் வைத்து.. உருக்கமாக போஸ்ட் போட்ட ரோபோ சங்கர் மனைவி.. குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கடந்த வாரத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தையை தன்னுடைய கைகளில் வைத்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான குடும்பமாக ரோபோ சங்கர் குடும்பம் இருக்கிறது. ரோபோ சங்கர் நடிகராக சின்னத்திறையில் அறிமுகம் ஆகி இப்போது வெள்ளி திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக தன்னுடைய திறமையை நிரூபித்த ரோபோ சங்கருக்கு வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களோடு காமெடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்போது கதாநாயகனாகவும் மாறி இருக்கிறார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கரும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல youtube சேனல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
இந்திரஜா பிகில் படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார். அதில் பாண்டியம்மா கேரக்டரில் இந்திரஜா நடித்திருந்தார். அதுபோல சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் தன்னுடைய தந்தையோடு சேர்ந்து தலைகாட்டி இருந்தார். கடந்த வருடத்தில் தான் இந்திரஜாக்கு அவருடைய மாமா கார்த்திக் என்பவரோடு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு சில வாரங்கள் கடந்ததும் இந்திரஜா கர்ப்பமாக இருந்தார். இதனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே இந்திரஜாவும் அவருடைய கணவரும் வெளியேறி விட்டனர்.
அதுபோல ரோபோ சங்கரின் குடும்பத்தினர் எப்போதும் ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறார்கள். ரோபோ சங்கர்க்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். அந்த புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு விஷால் கை நடுக்கத்தோடு பேசிய வீடியோ எப்படி இணையத்தில் ட்ரெண்டானதோ அதுபோல ரோபோ சங்கர் புகைப்படமும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ரோபோ சங்கர் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. ரோபோ சங்கர் நிலைமை இனி அவ்வளவுதான் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் ரோபோ சங்கர் சில மாதங்களிலேயே தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு மீண்டும் பழைய நிலைக்கு வந்தார்.
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்.. பேரன் பற்றி எமோஷனல் போஸ்ட் போட்ட ரோபோ சங்கர்
அதற்கு பிறகு தான் அவருடைய மகளுக்கு திருமணமும் செய்து வைத்தார். திருமணத்தின் போது அதிகமான பேட்டிகளில் கலந்துகொண்டு இவர்களுடைய குடும்ப விஷயங்கள் பேசியது இணையத்தில் பேசப்பட்டது. அப்போதும் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் கூட வந்தது. அதை எல்லாம் கண்டுகொள்ளாத ரோபோ சங்கர் குடும்பத்தினர் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கு கடந்த வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த விஷயத்தை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கர் குடும்பத்தினர் பகிர்ந்து இருந்தனர். நேற்று ரோபோ சங்கரின் மனைவியான பிரியங்கா சங்கர் தன்னுடைய பேரனை கையில் வைத்து ஆட்டிக் கொண்டே தூங்க வைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "புது வரவல்ல இது... புது உறவு.. ஏங்கி இருந்த கைகளுக்கு உன்னை ஆர தழுவ ஆசை வந்ததடா என் அன்பு பேரனே" என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். பொதுவாக எல்லா பெற்றோருமே தங்களுடைய குழந்தைகளின் குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சுவது ஆனந்தமாகவும் பாக்கியமாகவும் பார்ப்பார்கள்.
சிலருக்கு தான் இதுபோல பாக்கியம் கிடைக்கிறது. தங்களுடைய குழந்தைகள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும்போது அந்த பேர குழந்தைகளை கொஞ்ச முடியாமல் பல தாத்தா பாட்டிமார்கள் குழந்தைகளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் ரோபோ சங்கர் குடும்பத்தினர் எதிர்பார்த்தபடி அவர்களுடைய குழந்தை சீக்கிரமாக கையில் வந்ததை பற்றி உருக்கமாக பிரியங்கா சங்கர் போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு அதிகமான லைக்குகள் குவிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications