உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்.. பேரன் பற்றி எமோஷனல் போஸ்ட் போட்ட ரோபோ சங்கர்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கருக்கு கடந்த வாரத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய பேரனை கையில் ஏந்திய தருணம் குறித்து ரோபோ சங்கர் உருக்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் தான் பெற்ற பிள்ளைகளை விடவும் தங்களுடைய குழந்தைகள் பெற்ற பேரகுழந்தைகளை கையில் ஏந்தும் தருணம் பல பெற்றோர்களுக்கு எமோஷனலாக இருக்கும். தன்னுடைய குழந்தைகள் பல கஷ்டங்களை தாண்டி குழந்தை பெற்று அந்தக் குழந்தையை பார்க்கும் போது பலர் எமோஷனலாகி அழுது விடுவார்கள்.

அது போலத்தான் நடிகர் ரோபோ சங்கரும் தன்னுடைய ஒரே மகளான இந்திரஜாவின் குழந்தையை கையில் தூக்கியதும் கண் கலங்கி அழுதிருக்கிறார். ரோபோ சங்கர் சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளி திரையில் கதாநாயகனாகவும் உயர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் அது இது எது, லொள்ளு சபா, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் அதற்குப் பிறகு முன்னணி நடிகர்களோடு காமெடியனாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இப்போது தன்னுடைய பேரன் பிறந்த நேரம் அவரும் கதாநாயகன் ஆகி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் கதாநாயகியோடு டூயட் பாடும் வீடியோக்களையும் ரோபோ சங்கர் தான் வெளியிட்டார். அதுபோல ரோபோ சங்கர் அடிக்கடி சமூக வலைதளத்தில் பேசப்படும் நபராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டில் வளர்த்த கிளி பற்றிய வீடியோ வெளியே வந்தபோது அவருக்கு பைன் போடப்பட்டது.

அதற்கு பிறகு தான் சில கிளிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்ற விஷயமே பலருக்கும் தெரிந்தது என்று சொல்லலாம். கிளி பிரச்சனை முடிவடைந்த சில மாதங்களிலேயே ரோபோ சங்கர் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சில வாரங்களுக்கு முன்பு விஷால் பிரஸ் மீட்டிங்கில் பேசும்போது கைகள் நடுங்கி இருந்ததை பார்த்ததும் பலர் எப்படி பேசினார்களோ அதுபோல ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து இருந்த புகைப்படத்தை பார்த்ததும் அவருடைய பேச்சு தான் இணையத்தில் இருந்தது. ஒரு சிலர் ரோபோ சங்கர் அதிகமாக மது குடித்ததால் அவருடைய உடல்நிலை இப்படியாகிவிட்டது என்று கூறி வந்தனர்.
பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் கதறி அழுத ரோபோ சங்கர் மருமகன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்
ஆனாலும் மஞ்சள் காமாலை பாதிப்பால் உடல் எடை குறைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்த ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்தினரின் அன்பு மற்றும் பாசத்தால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து இருக்கிறார். அதுபோல ரோபோ சங்கர் உடல்நிலை சரியானதும் தன்னுடைய ஒரே மகளான இந்திரஜாவிற்கு அவரின் உறவினரை திருமணம் செய்து வைத்தார்.
இந்திரஜா அவருடைய கணவர் கார்த்திக் உடன் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில் இந்திரஜா கர்ப்பமாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறி இருந்தார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

அந்த குழந்தையை முதல் முறை கையில் ஏந்திய தருணத்தை எமோஷனலாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதில் "உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ரோபோ சங்கருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications