பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் கதறி அழுத ரோபோ சங்கர் மருமகன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கு சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தன்னுடைய குழந்தையின் முகத்தை பார்த்ததும் ரோபோ சங்கரின் மருமகன் கதறி அழுது இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சிலர்தான் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அதில் ரோபோ சங்கரும் ஒருவர். விஜய் டிவியில் ஆரம்பத்தில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்துவிட்டு ரோபோ சங்கர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் நபராக இருக்கிறார். ரோபோ சங்கர் பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்த புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அதில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து போன ரோபோ சங்கரை பார்த்ததும் இனி அவருடைய நிலைமை அவ்வளவுதான் என்று பலர் ஏளனமாக பேட்டி கொடுத்து இருந்தனர். ஆனால் அவருடைய குடும்பத்தினர் அவரின் அன்பு மற்றும் பாசத்தால் ரோபோ சங்கரை பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தார்.
அதற்கு பிறகு அவருடைய ஒரே மகளான இந்திரஜாவிற்கு திருமணமும் பிரம்மாண்டமாக செய்து வைத்தார். இதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்க்கு அவருடைய உறவினரான கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்து வைத்திருந்தனர். அப்போது அதிகமான விமர்சனங்கள் வந்தது.
ஆனால் அதை எல்லாம் ரோபோ சங்கர் குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை.
திருமணத்திற்கு பிறகு இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கி சில மாதங்களில் இந்திரஜா கர்ப்பமாகி இருந்தார். அதனால் அந்த நிகழ்ச்சியில் அவரால் தொடர முடியவில்லை. நாங்கள் அப்பா அம்மா ஆக போகிறோம் என்று ரசிகர்களிடம் பகிர்ந்து விட்டு நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தனர்.
அதற்குப் பிறகு சமூக வலைதளத்தில் எப்போதும் போலவே இந்திரஜா ஆக்டிவாக இருந்தார். அவருடைய வளைகாப்பும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்திரஜாவிற்கு நேற்று முன்தினம் கடந்த திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.
அந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் இருவருடைய கைகளில் குழந்தையின் கைகளையும் வைத்து புகைப்படத்தோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இந்திரஜாவின் கணவரான கார்த்திக் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் இந்திரஜா பிரசவ அறையில் இருக்கும் போது அவருடைய கணவர் மற்றும் அம்மா கதறி அழுது கொண்டிருந்ததும் பிறகு குழந்தைக்காக அங்கிருந்த எல்லோரிடமும் ஒரு துணியில் பிச்சை வாங்கி அதில் குழந்தையை வாங்கி இருந்தார்கள்.
அதோடு குழந்தையின் முகத்தை பார்த்ததும் கார்த்திக் கதறி அழுது இருக்கிறார். கார்த்திக் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அதற்கு பிறகு அவருடைய அம்மா தான் ஏழ்மையான சூழ்நிலையிலும் கார்த்திக்கை வளர்த்து படிக்க வைத்திருக்கிறார்.
அதுபோல கார்த்திக் தன்னால் முடிந்த அளவிற்கு பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இப்போது அவருடைய அப்பாவே தன் மகனாக கையில் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியோடு ஆனந்த கண்ணீர் அவர் சிந்தி இருக்கிறார். தந்தையின் பாசத்தை அந்த வீடியோவில் அழகாக பார்க்க முடிகிறது.
குழந்தை என்பது யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் அதுவும் நம்முடைய ரத்த சொந்தம் நம் கைகளில் சிரிக்கும்போது வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது சிலருக்கு சிரிப்பாக வெளிப்படும் சிலருக்கு அழுகையாக வெளிப்படும் அதுபோல ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் தன்னுடைய குழந்தையின் முகத்தை பார்த்ததும் கதறி அழுததை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications