நாலு மாசத்துல என்னை மீட்டு கொண்டு வந்தது இதுதான்.. மகிழ்ச்சியோடு மனம் திறந்த ரோபோ சங்கர்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் எப்படி உடல் சரியாகி வந்தேன் என்பது பற்றி சமீபத்தில் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்த எனக்கு இந்த நான்கு மாத காலத்தில் மருந்தாக கிடைத்ததும் நகைச்சுவை தான் என்று தன்னம்பிக்கையோடு பல தகவல்களை ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.

ரோபோ சங்கர் என்ற பெயர் பலருக்கும் பரிட்சயமானதுதான். காரணம் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் இவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ரோபோ சங்கருக்கு பிரபலம் கொடுத்தது என்னவோ விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான்.
ஆனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சமூக வலைதளத்திலும் அதிகமான ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். அந்த நேரத்தில் விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு போய்க் கொண்டிருந்தார். அதை தொடர்ந்து அவருக்கு வெள்ளி திரைகளிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.
தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களோடு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அது குறித்து சமீபத்தில் முதல் முறையாக மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில், நான் ஆரம்பத்துல உடம்பு குறைக்கிறதுக்காகத்தான் டயட்ல இருந்தேன். ஆனா அந்த நேரத்துல எனக்கு எல்லாருக்கும் வருவது போல ஒரு நோய் வந்துச்சு, அது மஞ்சள் காமாலை தான்.அதனால வேகமா உடம்பு குறைய ஆரம்பிச்சுட்டு பிறகு நல்ல நேரமா எனக்கு நல்ல டாக்டர்கள் அமைஞ்சாங்க. அவங்க என்னுடைய உடம்பு நல்லா பாத்துக்கிட்டாங்க. அதோட என்னுடைய வீட்டிலும் எனக்கு நல்ல சப்போர்ட் கிடைச்சது.
என்னுடைய மனைவியா இருந்தாலும் சரி, என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, நல்ல நண்பர்கள் எல்லோருமே என்ன நல்லபடியா பார்த்துகிட்டாங்க. அதனாலதான் நான் இவ்வளவு சீக்கிரமா பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறேன். அதைவிட நான் இந்த மாதிரி திரும்புவதற்கு காரணம் நாலு மாசமா நகைச்சுவை நிகழ்ச்சிகளை மட்டும் தான் பாத்துக்கிட்டு இருந்ததுதான்.
நான் எத்தனை பேரையோ நகைச்சுவையாக பேசி அவங்களுடைய கஷ்டத்தை எல்லாம் போக்கி இருக்கிறேன். ஆனால் என்னுடைய கஷ்டத்தையும், சோகத்தையும் நீக்கியது பல காமெடி ஷோக்கள் தான். அதிலும் ராமர் காமெடி எல்லாம் அடிச்சுக்கவே முடியாது. அவரோட காமெடியை பார்த்து நான் பல நேரம் தனியாவே பெட்டுல உருண்டு சிரிச்சி இருக்கேன்.

எனக்கு காமெடி பண்ண மட்டும் இல்ல யாராவது காமெடி பண்ணுனாலும் அதை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி தான் நான் இந்த நாலு மாசமும் காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து தான் சிரிச்சி பழைய நிலைக்கு சீக்கிரமா வந்தேன்.என்னுடைய உடல் நிலையை குறித்து ஒரு சில youtube சேனல்கள்ல தப்பு தப்பா மெசேஜ் போட்டாங்க.
ஆனால் அதை நான் நல்ல நிலைமையில் வீட்டில் இருந்து பார்த்துட்டு சிரிச்சிட்டு தான் இருந்தேன். ஆனா இப்ப நான் உடம்பு சரி ஆகி மீண்டு வந்ததும். வெளிய போற இடத்துல எல்லாம் பல பேர் என்கிட்ட நீங்க பழையபடி வரணும்னு நாங்க வேண்டிகிட்டோம்னு சொல்றாங்க. இந்த அன்பு பாக்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கு என்று அந்த பேட்டியில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications