8 மாசமா எங்க வீட்டில் சந்தோசம் இல்ல.. எங்களை பற்றி நிறைய தப்பா பேசிட்டாங்க! இந்திரஜா எமோஷனல்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கருக்கும் அவருடைய மாமா தொடர்வோம் கார்த்திக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு இவர்களுடைய திருமண வைபோகம் களைகட்ட தொடங்கி விட்டது. இந்த நிலையில் கல்யாண பொண்ணு இந்திரஜா தன்னுடைய குடும்பத்தை பற்றி உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து இருந்து நிலையில் அந்த நேரத்தில் ரோபோ சங்கர் குறித்து அதிகமாக பேசப்பட்டது. அதனால் தாங்கள் மனரீதியாக பெரிய அளவில் வருத்தப்பட்டதாக இந்த ராஜா சங்கர் அதில் கூறியிருக்கிறார்.

பொதுவாக உலகம் நல்லா இருந்தாலும் விமர்சிக்கும் நல்லா இருந்து கெட்டுப் போய்விட்டாலும் விமர்சிக்கும். அப்படியான உலகத்தில் தான் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுபோல தான் சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் குறித்து இணையத்தில் அதிகமான சர்ச்சைகள் பரவி வந்தது.
ரோபோ சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக கஷ்டப்பட்டு இருந்தாலும் தன்னுடைய திறமையின் மூலமாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் தன்னுடைய கலக்கலான மிமிக்கிரி காமெடியால் ரசிகர்களை கவர்ந்து பல முன்னணி நடிகர்களோடு அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக திரைப்படங்களில் கதாநாயகன்களுக்கு இணையாக ரோபோ சங்கர் நடித்துக் கொண்டிருந்தார். அப்படியான நிலையில் தான் அவருக்கு மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் சூட்டிங்கில் இருந்த ரோபோ சங்கர் தன்னுடைய உடல் நிலையை பெரிய அளவில் கவனத்தை செலுத்தாமல் இருக்க மஞ்சள் காமாலை பெரிய அளவில் அவருடைய உடலை பாதிக்க தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்ட ரோபோ சங்கர் தொடர்ச்சியாக உடல் எடை குறைய தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் ரோபோ சுந்தரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக அதை பார்த்து ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி உடல் மெலிந்து போனார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதே நேரத்தில் ஒரு சிலர் ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தான் அவருடைய உடல்நிலை இப்படி ஆகிவிட்டது என்று பேசி வந்தனர். இது குறித்து ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகளும் விளக்கம் கொடுத்து இருந்தனர். அதற்கு பிறகு படிப்படியாக ரோபோ சங்கர் தன்னுடைய பழைய நிலைக்கு மாறி இருந்தார். இப்படியான நிலையில் இப்போது அவருடைய மகளுக்கு பிரமாண்டமாக திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இது குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் எட்டு மாசத்துக்கு முன்னாடி எங்க வீடு இப்ப இருக்குற மாதிரி சந்தோஷமாலாம் இல்ல... எப்போதும் எங்கள் வீட்டில் ஒரு குழப்பமும் கண்ணீரும்தான் இருந்தது, நான் பிறந்த பிறகுதான் எங்க அப்பாவுடன் வாழ்க்கை மாறிவிட்டது என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் எங்க அப்பாவின் நிலைமையை பார்த்து நானும் மனசுக்குள் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் பலர் எங்களை கஷ்டப்படுத்திட்டாங்க. தேவையில்லாததை எல்லாம் தப்பு தப்பா பேசினாங்க. ஆனால் இன்றைக்கு எல்லாவற்றையும் கடந்து நாங்கள் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம். அதுபோல ஒரு கஷ்டம் வந்துட்டா அதையே நெனச்சு முடங்கிட்டோம்னா அந்த கஷ்டம் நம்மை ஜெயிச்சு விடும். ஆனால் அடுத்து என்ன செய்யணும் என்று அதை நோக்கியே நம்முடைய பயணத்தை இருக்க வேண்டுமே தவிர நம்மை விமர்சிப்பவர்களை பற்றி நாம் கண்டு கொள்ளக்கூடாது.
அப்படித்தான் நாங்கள் அந்த கஷ்ட காலத்தில் இருந்து மீண்டு வந்தோம் என்று இந்திரஜா பேசியிருக்கிறார். அதற்கு அவருடைய அம்மா என்னுடைய பொண்ணு தான் எங்களுக்கு அதிஷ்ட லட்சுமி அவள் பிறந்த பிறகுதான் எங்களுக்கு எல்லா விதத்திலும் நல்லது நடக்க தொடங்கியது. ஆரம்பத்தில் நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். பிறகு என்னுடைய பிள்ளை பிறந்த பிறகு என் கணவர் ரொம்பவே வேலை வேலை என்று ஓட தொடங்கிவிட்டார். அப்போதெல்லாம் நான் அவரை திட்டுவேன் ஒரே ஒரு பிள்ளை நமக்குன்னு இருக்கு அது கூட கொஞ்ச நேரமாவது இருக்கீங்களா? என்று சொல்லுவேன். ஆனா அதற்கு என்னுடைய பொண்ணு அப்பா நமக்காக தான் அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாங்க. அப்பாவை பிரீயா விடு அவங்க நல்லபடியா வேலை பாத்துட்டு வரட்டும்.
அப்பா எப்போதும் நம்மளை மட்டும்தான் நினைப்பாரு அதனால அவரு வேலையில அவரு வெற்றி அடைவது தான் நம்ம சந்தோசம் என்று சொல்லுவா, அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்லுரா.. அதனாலதான் என்னுடைய கணவர் உடம்பு முடியாம அவ்வளவு சோர்ந்து போய் இருந்தாலும் பிறகு பழைய நிலைக்கு மாறியிருந்தார்... என்று ரோபோ சங்கரின் மனைவியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications