எனக்கே ச்சீன்னு இருக்கு.. ஏன் இப்படி பேசுறீங்க? தப்பா எதுவும் நடக்கல.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு ரோபோ சங்கர் தன்னுடைய மகள் மற்றும் மருமகன் குடும்பத்தோடு முதல் முறையாக பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு இருந்த ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் சில விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறார். அதாவது தனக்கும் தன்னுடைய மனைவி இந்திரஜாவிற்கும் எத்தனை வயது வித்தியாசம், எப்படி தங்களுக்குள் காதல் ஏற்பட்டது என்பது பற்றி அதில் பேசியிருக்கிறார்.

Actor Robo Shankar s son-in-law explain to rumour

அந்த வகையில் காமெடி நடிகராக பலருக்கும் பரீட்சயமான ரோபோ சங்கர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்தில் வலம் வந்தார். ஆரம்பத்தில் மேடை நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன கேரக்டர் செய்து கொண்டிருந்த ரோபோ சங்கர் ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

உடலெல்லாம் பெயிண்ட் பூசிக்கொண்டு இவர் செய்யும் பெர்பார்மன்ஸ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தாலும் அந்த மாதிரி பெர்ஃபார்மன்ஸ் செய்வதற்காக ரோபோ சங்கர் பெரிய அளவில் கஷ்டப்பட்டு இருக்கிறாராம். தற்போது பல முன்னணி நடிகர்களோடு முக்கிய கேரக்டரில் ரோபோ சங்கர் நடித்து வருகிறார். ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா சங்கரின் திருமணம்தான் சமீபத்தில் சில வாரங்களாகவே இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அதற்கு பிறகு ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் அவருடைய மாமா கார்த்திக்கை காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணமும் செய்து இருக்கிறார்.

ஆனால் இவர்களுடைய திருமண பேச்சுவார்த்தை வெளியே தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அதிகமான சர்ச்சைகளிலும் ரோபோ சங்கரின் குடும்பம் சிக்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ரோபோ சங்கர் மகள் திருமணத்தில் ரோபோ சங்கர் மனைவிக்கு அவருடைய மருமகன் முத்தம் கொடுத்தது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அது குறித்து ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் கொடுத்த விளக்கத்தில், நான் என்னுடைய அக்காவுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அவருடைய கன்னத்தில் தான் முத்தம் கொடுக்கப் போனேன். அவர் எதிர்பாராத விதமாக திரும்பியதால் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று வீடியோவில் காட்சி வந்துவிட்டது என்று கூறியிருந்தார். அதுபோல அதே பேட்டியில் எனக்கும் என்னுடைய மனைவி இந்திரஜாவிருக்கும் 19 வயது வித்தியாசம் என்றெல்லாம் சிலர் செய்திகள் பரப்பி வருகிறார்கள்.

உண்மையில் அதுவெல்லாம் கிடையாது. எங்களுக்குள் இருப்பது உண்மையில் 9 வயது வித்தியாசம் தான். ஆரம்பத்தில் எனக்கும் இந்திரஜாவை பிடிக்கும். அப்போது அவரிடம் காதலை சொல்லும் போது எனக்கே ச்சீன்னு இருந்துச்சு. படிக்கிற புள்ள கிட்ட என்ன லவ்வுன்னு எனக்கு சில நேரங்களில் தோணும். ஆனால் இந்திரஜா என் மீது வைத்திருந்த காதல் மற்றும் ரோபோ சங்கர் மாமா குடும்பத்தினர் என் மீது வைத்திருந்த அன்பு தான் எங்களை திருமணம் செய்ய வைத்தது.

ஆனாலும் நாங்கள் சொந்தமாக உழைத்து எங்களுடைய பணத்தில் தான் திருமணம் செய்து இருக்கிறோம். ஆனால் எங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு தப்பு தப்பாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். எதற்காக இப்படி எல்லாம் பேசுறாங்கன்னு தெரியல. ஆனால் நாங்க தப்பு தப்பா கமெண்ட் போடுறவங்கள பற்றி கண்டுக்கிறது கிடையாது. தேவையில்லாமல் கமெண்ட் போடுபவர்கள் அவர்களுடைய நெட்டையும் வேஸ்ட் செய்து, டைமையும் வேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கார்த்திக் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+