ஐயோ ரோபோ சங்கருக்கு என்னாச்சு? சிங்கப்பூரில் வண்டியில் வைத்து தள்ளிட்டு போகும் மனைவி..!
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ரோபோ சங்கரும் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென்று உடல் எடை குறைந்து பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். பிறகு அதிலிருந்து இப்போது மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் ரோபோ சங்கர் மனைவி ரோபோ சங்கரை வண்டியில் வைத்து தள்ளி கொண்டு வரும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் காமெடிக்கு பெயர் போன கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ரோபோ சங்கர் அதை தொடர்ந்து இப்போது சினிமாவிலும் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கிறார். அதிகமாக முன்னணி நடிகர்களோடு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் அடிக்கடி இணையத்தில் அதிகமாக பேசப்படும் நபராக இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த கிளியால் அவருக்கு வந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. பலருக்கும் தங்களுடைய வீட்டில் கிளி வளர்த்தால் அதற்கு உரிய அனுமதி வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்த நிலையில் ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த கிளியால் அவருக்கு போடப்பட்ட அபராதத்தை பார்த்து பலரும் வாயடைத்து போயிருந்தனர். அந்த பிரச்சனை முடிவடைவதற்குள் சில நாட்களிலேயே ரோபோ சங்கரின் ஒரு புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
ஆமாம் அதில் ரோபோ சங்கர் அதிக அளவில் உடல் எடை குறைந்து இருந்தார். அப்போது ரோபோ சங்கர் அதிகமாக மது குடித்ததனால் அவர் உடல் எடை குறைந்து விட்டார் என்று செய்தி பரப்பி வந்த நிலையில் அதற்கு பிறகு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டதால் தான் உடல் எடை குறைந்து இருந்தார் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிய வந்தது. பிறகு தன்னுடைய உடல் எடையை மீண்டும் பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டு வந்து இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் அவ்வப்போது தன்னுடைய மனைவி மற்றும் மகளோடு அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருவார்.
ரோபோ சங்கர் எந்த சமூக வலைத்தளங்களிலும் அக்கவுண்டுகளை வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் சமூக வலைத்தள பக்கங்களில் ரோபோ சங்கரின் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கும். அந்த மாதிரி தான் தற்போது கூட ரோபோ சங்கரின் மனைவியான பிரியங்கா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரோபோ சங்கர் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் லக்கேஜ் வைத்து தள்ளி கொண்டு வரும் வண்டி ஒன்றில் அமர்ந்து கொண்டு தன்னுடைய மனைவி தன்னை தள்ளி வர கலக்கலாக ஒரு டப்ஸ்மாஷ் பண்ணி இருக்கிறார். அதாவது கவுண்டமணியின் பிரபலமான காமெடியான ஐயா முனுசாமி என்ற காமெடி டயலாக் சொல்லிக் கொண்டே அந்த வீடியோவில் ரோபோ சங்கர் வர அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து நம்முடைய முயற்சிகள் இருந்தால் மீண்டும் வந்துவிடலாம் என்று ரோபோ சங்கர் சொல்வது மட்டுமல்லாமல் அதை செய்தும் காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் இவர் இதுபோல இன்னும் நிறைய வீடியோக்கள் போட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications