விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிக் பாஸ் பிரபலம்.. இனி அவருக்கு பதில் கமல் பட நடிகர் தான் ஹீரோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பனிவிழும் மலர்வனம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் ரயான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பனிவிழும் மலர்வனம் சீரியலிலிருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் புதியது புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றுதான் பனிவிழும் மலர்வனம் சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. இதில் கதாநாயகியாக நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக பாதியில் இருந்து நடித்தவர்தான்.

அதுபோல வினிஷாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் சீரியலை போல தைரியமாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசினாலும் பல இடங்களில் அமைதியாகவே இருந்தார். கிச்சனில் மட்டுமே வினிஷாவின் செயல்பாடுகள் இருந்தது என்பது பலருடைய கருத்தாக இருந்தது. அதனாலேயே சில வாரங்களில் வினுஷா வெளியேற்றப்பட்டார்.
அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷா இருக்கும்போது நிக்சன் அவரை பார்த்து உருவ கேலி செய்ததும் பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நிக்சன் வினிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பனிவிழும் மலர்வனம் சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். வினிஷாவிற்கு ஜோடியாக நடிகர் சித்தார்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல வினிஷாவின் தம்பியாக நடிகர் ரயான் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியல் மற்றொரு ஹீரோவாக இருந்தார். அவருக்கு ஜோடியாக மௌன ரகம் சீரியலில் நடித்து பிரபலமான ஷில்பா நடித்து வருகிறார். இந்த நிலையில் ரயானுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து வைல்டு கார்டு போட்டியளராக அறிமுகமானார்.

அறிமுகமான முதல் சில வாரங்கள் பெரிய அளவில் அவர் பிரபலமாகவில்லை. ஆனால் அதற்குப் பிறகு தன்னுடைய விளையாட்டை வேறுவிதமாக காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதிலும் டிக்கெட் டூ பினாலேவில் வென்று நேரடியாக பைனலுக்கு தேர்வான முதல் போட்டியாளர் ராயன் தான்.
அதுபோல கடைசிவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே பிக் பாஸ் பிரபலமான லாஸ்லியா உடன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் இப்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரயான் வருவார் என்று அவர் நடித்து வந்த பனிவிழும் மலர்வனம் சீரியலில் வேறு நடிகர்களை நடிக்க வைக்காமல் இருந்தனர். கதையின் படி அவர் வெளியூருக்கு படிக்க சென்றிருப்பது போல காட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என்பதால் சீரியலில் அவருக்கு பதிலாக புது ஹீரோ ஒருவரை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஹீரோ வேற ஏதுமில்லை அது நடிகர் தேஜாங்க் தான். அவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் பென்குயின் மற்றும் விக்ரம் போன்ற படத்தில் நடித்திருக்கிறார். இனி இவர்தான் பனிவிழும் மலர்வனம் சீரியலில் சேரன் ஆக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications