எதிர்நீச்சல் குணசேகரனுக்கு பதிலாகத்தான் இந்த நடிகரா..? இவருக்கு பதில் இவர்தானா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் முதல்முறையாக வெள்ளித்திரையில் இருந்த நடிகர் மாரிமுத்து சின்னத்திரையில் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார்.

தற்போது அதிகமான ரசிகர்களின் மனதை மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் கவர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு வந்த சீரியல் வாய்ப்பு பற்றியும் அதில் தான் நடிக்க முடியாமல் போய்விட்டது பற்றியும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

actor SA Chandrasekhar will play the role of the actor Marimuthu of the kilakku Vasal serial

தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு வந்தவர்தான் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் உட்பட சில திரைப்படங்களை இயக்கி ஒரு இயக்குனராக மாரிமுத்து பிரபலமானார்.ஆனால் தான் இயக்கிய திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததால் நடிகராக தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அதுபோல பல திரைப்படங்களில் இவர் முன்னணி கேரக்டரில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் இவர் நடிக்கும் பல திரைப்படங்கள் இவருக்கு வாங்கி கொடுத்த பெயரை விடவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து இருக்கிறது.

மாரிமுத்து ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல தற்போது நடிகர் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் தனக்கு வந்த வாய்ப்புகள் குறித்தும் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது விஜய் டிவியில் "கிழக்கு வாசல்" என்று ஒரு சீரியல் வரப்போகுது. அந்த சீரியல் "சம்சாரம் அது மின்சாரம்" மாதிரியான கதை தான். அந்த படத்தில் விசு நடித்த கேரக்டர் மாதிரி இருக்குனு சொல்லி நான் ஜெயிலர் சூட்டிங்கில இருக்கும்போது ராதிகா மேடமே எனக்கு போன் பண்ணி கேட்டு இருந்தாங்க.

actor SA Chandrasekhar will play the role of the actor Marimuthu of the kilakku Vasal serial

ஆனால் எனக்கு அந்த சீரியல் பண்ண முடியாதுங்கற சூழல் வந்துடுச்சு. அதுவும் பெரிய கேரக்டர் தான். ஆனாலும் அதை பண்ண முடியாம ஆகிடுச்சு. அதுக்கு பிறகு தான் இப்ப அந்த கேரக்டரை எஸ்.ஏ சந்திரசேகர் சார் பண்றார் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் நல்லவேளை நீங்க அந்த வாய்ப்புக்காக எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகல. அப்படி விலகி இருந்தால் இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உங்களுக்கு கிடைச்சி இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒருவேளை அவரதில் நடித்து இருந்தால் வில்லனாக பார்த்து வந்த மாரிமுத்துவை ஒரு பாசமான தந்தை கேரக்டரில் பார்த்திருக்கலாம். என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+