பிரபல நடிகை சமந்தாவின் அப்பா ஜோசப் காலமானார்.. நிலைகுலைந்து நொறுங்கி கதறிய மகள்.. அந்த எமோஷனல் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை சமந்தாவின் தந்தை இன்று காலமானார்.. இந்த தகவலை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. இதை பார்த்ததுமே ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, சமந்தாவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா... தமிழ், தெலுங்கில் பல சூப்பர் டூப்பர் படங்களில் நடித்தவர்.. தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

television samantha

ஆனால் இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2021-ம் ஆண்டு தம்பதி இருவருமே பிரிந்துவிட்டனர். இதனால் தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.

அப்போது சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு சொல்லும்போது, "இந்த விவாகரத்து சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.. இதை பற்றி கேள்விப்பட்டதுமே என்னுடைய மனம் செயலற்று போய்விட்டது. எல்லா பிரச்சனைகளும் சில நாட்களில் சரியாகி விடும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் என் மகள் அவரது பக்கமுள்ள விளக்கங்களை சொல்லி என்னை சமாதானமே செய்தார்.. என்னுடைய மகள் இதை நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருப்பார்" என்று கூறியிருந்தார்.

விவாகரத்து: விவாகரத்துக்கு பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்த வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தீவிரமான சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிறிது காலம் நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார்.. பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

எனினும், நடிகை சமந்தா தன்னுடைய வாழ்நாளில் நடந்த பல விஷயங்களை வெளிப்படையாக அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.. சமீபத்தில்கூட தன்னுடைய தந்தையை பற்றி கூறியிருந்தார்.. "காஃபி வித் கரண் சீசன் 7" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் உங்களது கனவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மேற்படிப்பு: அதற்கு சமந்தா, "என்னுடைய கடனைத் திருப்பிச் செலுத்தமாட்டேன் என்று என்னுடைய அப்பா சொல்லிவிட்டார்.. என்னுடைய மேற்படிப்புக்கு பணம் செலுத்த எனது குடும்பத்திடம் பணம் இல்லை. அதனால், நான் வேறு வழியின்றி சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. உன் கடனை என்னால் செலுத்த முடியாது" என்று என் தந்தை கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது" என்று கூறியிருந்தார்.

television samantha

இந்நிலையில், தெலுங்கு - ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. "அதை குறிக்கும் விதமாக, 'Until we meet again Dad' என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு "மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா" என கனத்த இதயத்துடன் பதிவிட்டுள்ளார் சமந்தா.

என்ன காரணம்: இதையடுத்து, சமந்தாவுக்கு ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.. பலரும் சமந்தாவுக்கு ஆறுதலையும் சொல்லி வருகிறார்கள்.. சமந்தாவின் தந்தை இறந்த செய்தி, தமிழ், தெலுங்கு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சமந்தாவின் தந்தையின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ’citadel honey bunny’ தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று மாலை உயிரிழந்துள்ளார்.. இவரது தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜோசப் பிரபு சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இதனை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சமந்தாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+