நீண்ட இடைவெளிக்கு பிறகு.. புதிய சீரியலில் கமிட்டான நடிகர் சஞ்சீவ்.. யாருடன் நடிக்கிறார் தெரியுமா?
நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் புதியதாக ஒரு சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
சென்னை: நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் புதிதாக ஒரு சீரியலில் கமிட் ஆகியுள்ளார். அந்த சீரியலில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ். இருவரும் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தனர். சஞ்சீவ் மஞ்சுளா விஜயகுமாரின் அண்ணன் மகன் ஆவார். இவர் சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சஞ்சீவின் அக்கா நடிகை சிந்து. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அன்று முதல் அவருடைய பெண் குழந்தையை சஞ்சீவ்தான் வளர்த்து 2017 திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

ப்ரீத்தி- சஞ்சீவ்
ப்ரீத்திக்கும் சஞ்சீவுக்கும் இரு குழந்தைகள் உள்ளனர். விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் விஜய்யின் பெரும்பாலான படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் சஞ்சீவ். பின்னர் திருமதி செல்வம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்த இவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

பல அம்ச கேரக்டர்கள்
அந்த ஒரே சீரியலில் அப்பாவி, உழைப்பாளி, தாய் பாசம், மனைவி பாசம், வில்லன், பணக்காரன், ஏழை உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் அவர் நடித்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த தொலைகாட்சி நடிகர் என்ற விருதையும் 2010 இல் சன் குடும்ப விருதுகளில் சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

மெட்டி ஒலி
மெட்டி ஒலி மட்டுமல்லாமல் நம்பிக்கை, பணம், அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி வேப்பில்லைகாரி, சாரதா, கஸ்தூரி, நாலாவது முடிச்சு, ரேகா ஐபிஎஸ், மணிகூண்டு, கலசம், சிவசக்தி , நாணல், மேகலா, விளக்கு வச்ச நேரத்துல , இதயம், தென்றல் கண்மணி, சித்தி 2, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் உள்ளிட்ட சீரியல்களில் சஞ்சீவ் நடித்துள்ளார்.

17 படங்கள்
இதுவரை 17 படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் படம் பொன்மனச் செல்வன் எனும் படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் அவருடைய நண்பராக நடித்திருந்தார். அது போல் பத்ரி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அவர் நடித்த படம் யானை. பின்னர் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். மானாட மயிலாட, கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி, நம்ம வீட்டு கல்யாணம், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸில் 53 ஆவது நாள் அடியெடுத்து வைத்த சஞ்சீவ், அந்த வீட்டிலிருந்து 91 ஆவது நாள் வெளியேற்றப்பட்டார். இவர் சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் ஒரு சீரியலில் கமிட் ஆகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிகை ரேஷ்மா, நடிகை அஸ்வினி உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

நடிகை ராதிகா
மேலும் நடிகை ராதிகா, நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விசுவின் சூப்பர் டூப்பர் ஹிட்டான சம்சாரம் அது மின்சாரம் படத்தை தழுவி இந்த சீரியல் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப கதையம்சம் கொண்ட இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் நடிக்கவுள்ளதால் அவருடைய ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications