விஜய் அரசியலுக்கு வந்தால் இதுதான் நடக்கும்! வெளிப்படையாக பேசிய சஞ்சீவ்.. என்ன இப்படி சொல்லிவிட்டார்?
சென்னை: நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் சஞ்சீவ் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தன்னிடம் விஜய் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கிறார். அந்த நிலையில் சமீபத்தில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சஞ்சீவிடம் கேள்வி கேட்டபோது அவர் எதிர்பார்க்காத பதிலை கூறியிருக்கிறார்.
நடிகர் சஞ்சீவ் விஜய் போலவே மேனலிசம் காட்டுகிறார் என்று அவரை இணையத்தில் பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத சஞ்சீவ் தன்னுடைய பாணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதோடு தான் எதற்காக விஜய் போலவே நடந்து கொள்கிறேன் என்றும் விளக்கமும் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து சஞ்சீவ் பேசிய வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் வருவது தற்போது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனாலேயே பிரபலங்கள் பலரிடமும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் விஜய் அரசியல் பயணத்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். விஜய்யோடு கூட நடித்தவர்கள் நடிக்காதவர்களிடமே செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது,
போகிற இடமெல்லாம் நான் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சஞ்சீவிடம் இந்த கேள்வி கேட்கப்படாமல் இருக்குமா? சமீபத்தில் சஞ்சீவ்விடம் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதாவது நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகர் சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் இருவரும் வானத்தை போல சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவருமே ஜிம் ஒன்றில் ஒர்க்அவுட் செய்தபடி பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றனர்.
அதில் ஸ்ரீ என்னை மாதிரி எல்லாம் சஞ்சீவ் கிடையாது. நானும் சஞ்சீவ்வும் எல் கே ஜி யிலிருந்து ஒன்றாக படிக்கிறோம். ஆனால் சஞ்சீவ் ரொம்பவே நல்லா படிக்கிற பையன் சஞ்சீவ் எப்படியும் எல்லா முறையில் முதல் 10 இடங்களுக்குள் வந்து விடுவான். ஆனால் நானெல்லாம் அப்படி கிடையாது நான் பத்து பாடம் இருந்தால் பத்து பாடத்திலும் பெயிலாகி விடுவேன்.
ஆனால் சஞ்சீவ் எல்லா பரீட்சையிலும் மட்டுமல்லாமல் ஸ்கூல் காலேஜில் நடக்கும் எல்லா பங்க்ஷனிலும் டாப்பாக வந்து விடுவான். நானும் சஞ்சீவும் மட்டும் பிரண்டு கிடையாது என்று சொன்ன ஸ்ரீ குமார் சஞ்சீவ் அப்பாவும் என்னுடைய அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதுபோல என்னுடைய அம்மாவும் சஞ்சீவ் அம்மாவும் நண்பர்கள், சஞ்சீவ் அக்காவும் என்னுடைய அக்காவும் நண்பர்கள் இப்படி எங்களுடைய குடும்பமே நட்பாக இருக்கிறோம் என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தான் அந்த பேட்டியில் இறுதி கட்டத்தில் விஜய் அரசியல் குறித்து உங்களின் பார்வை என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் ஸ்ரீகுமார், விஜய் சார் குறித்து சஞ்சீவ் பேசும்போது பல ட்ரோல்கள் வந்திருக்கிறது. ஆனால் அது குறித்து விஜய் சரோ, சஞ்சீவோ இதுவரைக்கும் கவலைப்பட்டது கிடையாது. இவர்கள் இருவரிடமும் ஒரு கன்னியமான நட்பு இன்றளவும் இருக்கிறது.
இதனால் விஜய் சார் அரசியல் வருவது எங்களுக்கு சந்தோஷமான விஷயமாகவே இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து சஞ்சீவ் விஜய் அரசியலுக்கு வருவது உலகத்துக்கே மகிழ்ச்சியாக இருக்கும் விஷயம். எங்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லதே நடக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அந்த பேட்டியில் விஜய் குறித்து வேறு எதுவும் பெரியதாக பேசாமல் தவிர்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்யும் சஞ்சீவ்வும் கல்லூரியில் ஒன்றாக படித்திருந்தாலும் அதற்கு பிறகு இப்ப வரைக்கும் நண்பர்களாகவே இருக்கின்றனர். விஜய் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்களில் சஞ்சீவ் அவருடைய நண்பராகவே நடித்துக் கொண்டிருப்பார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ்விடம் விஜய் குறித்து பேட்டிகளில் கேள்வி கேட்கும் போது சஞ்சீவ் பெருமையாக விஜய் பற்றி பேச அதை வைத்தே சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்போது விஜய் பற்றி அதிகமாக பேசுவதை சஞ்சீவ் குறைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது.












Click it and Unblock the Notifications