கமல் ஸ்ரீ வித்யாவை உண்மையா தான் காதலிச்சாரு.. ஆனால் அந்த பொண்ணு பாவம்!- நடிகர் சந்தான பாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சந்தான பாரதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா காதல் குறித்து வெளிப்படையாக பேசுகிறார். நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தான பாரதி ஸ்ரீவித்யா பற்றிய பல சில தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் ஸ்ரீவித்யா என்னுடைய தோழி மட்டுமல்ல என்னுடைய காதலி. அதை நான் சொல்வதற்கு பயப்படவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவர்களுடைய காதலில் என்ன நடந்தது என்பது பற்றி நடிகர் சந்தான பாரதி பேசி இருக்கிறார்.

Actor Santhana Bharthi about actor Kamal Haasan and Srividya love

அதாவது நடிகர் கமல்ஹாசன் மற்றும் சந்தான பாரதி இணைந்து நடித்த குணா திரைப்படத்தில் இடம்பெற்ற குணா பாறை குறித்து இப்போது மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் குணா திரைப்படங்கள் குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இயக்குனராகவும் கமலின் நண்பராகவும் இருக்கும் நடிகர் சந்தான பாரதி இடம் இந்த குணா திரைப்படம் உருவான விதம் குறித்து பேசப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் அந்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா காதல் குறித்து சந்தான பாரதியிடமும் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் தானே உங்களுக்கு கமல்ஹாசனின் காதல் தெரியுமா? என்று கேட்க அதற்கு ஆமாம் தெரியும் உண்மையில் கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் காதலித்தார்கள். அவர்களுடைய காதல் ரொம்பவே உண்மையாக இருந்தது.

அதுபோல கமல்ஹாசனுக்கு ஸ்ரீவித்யா உதவியாக இருந்தார். ஆனால் அவர்களால் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாமல் போய்விட்டது. அதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால் கடைசியில் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை தான் சரியாக அமையாமல் போய்விட்டது. கடைசி காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். அந்த பொண்ணு தன்னுடைய கடைசி காலத்தில் கூட கமல்ஹாசனை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொன்னார். வேறு யாரையும் பார்க்க விரும்பவில்லை. அதனால் கமல்ஹாசனும் போய் பார்த்துவிட்டு வந்தார்.

இவர்கள் இருவரும் அந்த நேரத்தில் காதலித்தது எங்களுக்கு தெரியும் பிறகு இவர்களுடைய காதல் நிறைவேறவில்லை என்ற போது கமல்ஹாசன் அதிகமாக கஷ்டப்பட்டார் என்று அந்த பேட்டியில் சந்தான பாரதி பேசி இருக்கையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஸ்ரீவித்யா எப்போதுமே எனக்கு காதலிதான் என்று வெளிப்படையாக பேசிய வீடியோ சமீபத்தில் வைரலாகி வந்தது.

அதுபோல ஸ்ரீவித்யாவை பிரிந்த பிறகு கமல்ஹாசன் ரொம்பவே கஷ்டப்பட்டார் அதிலும் ஸ்ரீவித்யாவிற்கு உடல்நல பிரச்சனை இருப்பது தெரிந்த போதும் அதிகமாக வேதனை அடைந்தார் என்று சந்தான பாரதி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+