ஜீ தமிழ் சீரியல் கதாநாயகனுக்கு லப்பர் பந்து பட நடிகை உடன் நடந்த எங்கேஜ்மென்ட்.. குவியும் வாழ்த்து
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நடித்து பிரபலமடைந்த நடிகர் சந்தோஷ்க்கு சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மோனிகாவோடு நேற்று எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. இவர்கள் இருவரும் அந்த புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.

சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி அதில் காதலித்து திருமணம் செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் வெற்றி வசந்த் விஜய் டிவியில் பொன்னி சீரியல் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களுடைய எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் திருமணம் நடக்கும் என்று அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு ஜோடி தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரைக்கும் ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலை செந்தில்குமார் என்பவர் தான் இயக்கி இருந்தார். மனிஷாஜித் மற்றும் திவ்யா பத்மினி ஆகியோர் அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க சந்தோஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்த சீரியல் குடும்ப பின்னணியை கொண்ட காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த நிலையில் அந்த சீரியல் ஹிந்தியில் வெற்றி பெற்ற 'துஜ்சே ஹை ராப்தா' என்ற கதையை தழுவி தான் தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுபோல புதிய பார்வை என்ற ஷார்ட் பிலிமிலும் வித்தியாசமான கெட்டப்பில் சந்தோஷ் நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அண்ணா சீரியலிலும் நடித்து வந்தார்.

ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சந்தோஷ் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்தோடு எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது.

மௌனிகா சமீபத்தில் வெள்ளித்திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றே இவர்கள் இருவருடைய எங்கேஜ்மென்ட் பிரமாண்டமாக முடிவடைந்து இருக்கிறது. இவர்கள் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications