என் குழந்தையை மடியில் வைத்து தினேஷ் சொன்ன வார்த்தை.. ரச்சிதா பிரிய காரணம்? நண்பர் சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதா தன்னை பிரிந்து போன வேதனையை குறித்து நேற்று டாஸ்க்கில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் ரச்சிதா மற்றும் தினேஷ் பிரிவு குறித்து தினேஷின் நண்பரும் சீரியல் நடிகருமான சரத் சந்திரா சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தினேஷ் தேர்வானால் கண்டிப்பாக இதை தான் செய்வார் என்றும் நடிகர் சரத் சந்திரா பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

actor Sarath Chandra has shared about Rachitha and Dinesh split

அந்த வகையில் சீரியல் நடிகர் சரத் சந்திரா, தினேஷுடன் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்திருந்தார். ஒன்றாக சீரியல் நடித்திருப்பது மட்டுமல்லாமல் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தினேஷ் மற்றும் ரச்சிதா பிரிந்து இருப்பது குறித்தும் தினேஷூடைய கேரக்டர் குறித்தும் நடிகர் சரத் சந்திரா பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறுகையில் தினேஷூக்கும் எனக்கும் பல வருட நட்பு இருக்கு. நண்பன்னு தினேஷை சொல்றத விட எங்க வீட்டுல ஒருத்தனாக தான் நாங்க அவனை நினைக்கிறோம். என் குழந்தை மேல தினேஷ் உயிராய் இருப்பான். அந்த குழந்தைக்கு மொட்டை போட்டப்ப தாய் மாமனாக தினேஷ் மடியில வச்சுதான் மொட்டை போட்டு காது குத்தினோம். அப்போ தினேஷ் ஒரு வார்த்தை சொன்னான்.

என் மனைவி கூட என்னை மதிக்காம விட்டுட்டு போயிட்டாங்க. ஆனா நீதான் எனக்கு தாய் மாமன் அந்தஸ்து தந்திருக்கேன்னு சொன்னான். அந்த வார்த்தையை கேட்டு அடுத்த நொடி எனக்கு மனசு ரொம்பவே கஷ்டமாயிடுச்சு. இப்பவும் காலையில் 10 மணிக்கு வீட்டில் இருந்து தினேஷ் கிளம்பினான்னா இரவு தூங்குறதுக்கு தான் வீட்டுக்கு போவான். மற்ற நேரம் வேலை இல்லாட்டியும் வீட்டுக்கு போகவே மாட்டான்.

காரணம் தனிமை அதுவும் கடந்த மூன்று வருஷமா அதை ரொம்பவே அனுபவிக்கிறான். தனிமையால கஷ்டப்பட்டுட்டு இருக்கிறான். அதுபோல ரச்சிதாவும் எனக்கு தங்கச்சி மாதிரி தான். அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலான பிரச்சனை என்னன்னு அவங்க ரெண்டு பேர தவிர வேற யாருக்கும் 100 சதவீதம் தெரியாது. அதனால என்னதான் நண்பனாலும் என்னால ஒரு அளவுக்குத்தான் அவங்க விஷயத்துல உதவ முடிஞ்சது.

தினேஷுக்கு பிக் பாஸ் போகணும்கிறது தீவிரமான ஆசை.. கடந்த சீசனிலேயே ரச்சிதா டைட்டில் வாங்கிடுவான்னு அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிட்டு இருந்தான். ஆனா கடைசியில் அது நடக்காம போயிட்டதும் தினேஷ் ரொம்பவே வருத்தப்பட்டான். அடுத்த சீசனில் அதை சரி செய்யலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அதனால இந்த சீசன் தொடங்கிய முதல் நாளிலே அவன் போவான் என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன்.

ஆனால் வைல்ட் கார்டு மூலமாகத்தான் போயிருக்கிறான். அதே நேரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது தினேஷ் நல்லபடியா விளையாடிட்டு வர்றான். விளையாடுறேன்னு சொல்றத விட ஷோவை நல்லா ஹேண்டில் பண்றான். அதுபோல நிகழ்ச்சிக்காக தினேஷ் எதுவும் செயற்கையா செய்யல. நிகழ்ச்சிக்குள் நடந்து கொண்டிருக்கிற மாதிரி தான் அவனுடைய நிஜ கேரக்டர் இருக்கும்.

எப்படியும் தினேஷ் டாப் 5க்குள் வருவான் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தினேஷுக்கு டைட்டில் கிடைக்குமான்னு இப்ப என்னால சொல்ல முடியல. ஒருவேளை டைட்டில் கிடைச்சா அதை நேரா எடுத்துட்டு ரச்சிதா கிட்ட தான் போவான். அது மட்டும் நிச்சயமா எனக்கு தெரியும். ஆனால் ரச்சிதா சைடுல என்ன மனநிலையில் இருக்காங்கன்னு எனக்கு இப்போ தெரியல.

ஆனா நெருங்கிய நண்பன் என்கிற முறையில் என்னால் ஒரு விஷயத்தை உறுதியா சொல்ல முடியும். ஒரு வேளை தினேஷை விட்டு ரச்சிதா பிரிஞ்சா தினேஷூக்கு இன்னொரு கல்யாணம், வாழ்க்கை என்கிற எண்ணம் சுத்தமா கிடையாது. இது பற்றி நான் தினேஷிடம் பேசி இருக்கிறேன். அவன் இதையேதான் சொல்லி இருக்கிறான். அதைத்தான் நான் இங்க சொல்றேன்.

ரச்சிதா மீது தினேஷுக்கு இன்னும் அதே லவ் இருக்கு. ரெண்டு பேருக்கும் இடையிலான பிரச்சனை சரியாகுமாங்கிறது காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று அந்த பேட்டியில் சரத் சந்திரா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+