Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்குமார் வீட்டில் கொண்டாட்டம்.. தன் மகள், மகனுடன் ராதிகா.. வரலட்சுமி மிஸ்ஸிங் காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகா மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சரத்குமார் வீட்டில் கிறிஸ்மஸ் பண்டிகையை ராதிகா தன் குடும்பத்தோடு பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்.

நடிகர் சரத்குமார் 80ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். ஒரு சில நடிகர்கள் தான் அந்த கட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அதில் சரத்குமாரும் ஒருவர். இவருக்கு 70 வயதை கடந்து விட்ட நிலையிலும் இன்னும் இளமையாக இருக்கிறார். இதுதான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது.

sarathkumar diwali 2024

சரத்குமாருக்கு மட்டும் வயதே ஆகாதா என்று பலர் வியப்பாக கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனாலேயே இதை வைத்து சரத்குமார் சில இடங்களில் தன்னுடைய வயதை சொல்லாமல் நான் இன்னும் 24 வயது பையன் தான் என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அதோடு நான் 100 வயது கடந்தாலும் இதே போலத்தான் இருப்பேன்.

100 வயதை கடந்து வாழும் ரகசியத்தை உங்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்றால் என்னை முதல்வர் ஆக்குங்கள் என்றெல்லாம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

ஆனால் சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்திருந்தார். அதற்கு பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். ராதிகா முன்னணி நடிகையாக இருக்கும் போதே பிரதாப் போத்தனை திருமணம் செய்திருந்தார். ஆனால் அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார்.

அதற்குப் பிறகு வெளிநாட்டவர் ஆன ஹென்றி என்பவரை திருமணம் செய்து இருந்தார். அவரோடும் விவாகரத்து ஆகிவிட்டது. அதில்

ஹென்றிக்கும் ராதிகாவிற்கும் ரேயன் என்ற மகள் பிறந்திருக்கிறார். அவர்தான் தற்போது ராதிகாவின் ரேடான் நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

ரேயன், அபிமன்யு மிதுன் என்பவரை காதலுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ராதிகா என்னதான் சினிமா மற்றும் அரசியலில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தோடு அவ்வபோது நேரம் செலவழித்து அப்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

sarathkumar diwali 2024

அதிலும் தன்னுடைய பேத்தி மற்றும் பேரனுக்காக இவர் செய்யும் க்யூட்டான செயல்கள் பலருடைய பாராட்டை பெற்று வரும். அதுபோல வரலட்சுமி ஆரம்பத்தில் ராதிகாவோடு அதிகமாக இணக்கமாக இல்லாமல் தனியாக இருந்தார். ஆனால் பிறகு ராதிகாவை புரிந்து கொண்டு எல்லோரும் அடிக்கடி அவுட்டிங் செல்வது மற்றும் வீட்டிலும் பங்க்ஷன் கொண்டாடி வருகிறார்கள்.

சமீபத்தில் வரலட்சுமியின் திருமணம் நடைபெற்ற போது ராதிகா தான் முன்னின்று திருமண ஏற்பாடுகளை கவனித்திருந்தார். அதுபோல சில சுற்றுலாவிற்கு சாயா மற்றும் ராதிகா இருவரும் சரத்குமாரோடு சென்றிருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ராதிகா மற்றும் சரத்குமார் குடும்பத்தோடு கொண்டாடி இருக்கிறார்கள்.

ஆனால் அதில் வரலட்சுமி குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ராதிகா குடும்பத்தில் எதுவும் பிரச்சனையா? அதனால்தான் வரலட்சுமி ராதிகா வீட்டு பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லையா? என்று சில கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரத்தில் வரலட்சுமி தன்னுடைய கணவர் நிக்கோலோடு எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். அதற்கு ராதிகாவின் மகள் ரேயன் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதுபோல ராதிகா தன் மகள் மற்றும் மகன் பேத்தி குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்திற்கு வரலட்சுமி லைக் கொடுத்திருக்கிறார். இதனால் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, எல்லோரும் தனித்தனியாக இருந்ததால் ஒன்றாக பங்க்ஷன் கொண்டாட முடியவில்லை என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+