Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராதிகாவை திடீர்னு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிடுச்சு! அரவிந்த்சாமி திட்டுனாரு! சரத்குமார் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரும், நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு அடையாளங்களை கொண்டவருமான சரத்குமார், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டது குறித்து அவர் பேசிய விஷயங்கள் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

அந்த பேட்டியில், ராதிகாவுடன் திருமணம் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என சரத்குமார் கூறியுள்ளார்.

Actor Sarathkumar Radhika

சரத்குமார் பேட்டி

ராதிகாவுடன் திருமணம் குறித்து பேசும் போது, "நான் ராதிகாவை கல்யாணம் பண்ணவேண்டும் என்று யோசித்ததே இல்லை. அது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நடந்த முடிவு. திடீர்னு ராதிகாவை திருமணம் செய்ய வேண்டிய நிலைமை உருவாகிடுச்சு. அதற்கு முன்பு நாங்கள் நல்ல நண்பர்களாக தான் பழகினோம்" என சரத்குமார் கூறியுள்ளார்.

மேலும், "நான் என்னுடைய பழைய காதல் விஷயங்கள், வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் ராதிகாவிடம் திறந்த மனதோடு சொல்லியிருக்கிறேன். என்னைப் பற்றி எல்லா விஷயங்களும் அவருக்கு தெரியும். அந்த openness தான், எங்களுடைய திருமண வாழ்க்கையில் புரிதலை உருவாக்கியது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கையில் நட்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய சரத்குமார், "ஒரு கணவன்-மனைவி உறவில் முதலில் நட்பு இருந்துவிட்டால், பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பு குறைவு. நாங்கள் ஆரம்பத்திலேயே நண்பர்களாக இருந்தோம். அதுவே எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வலுவான அடித்தளம்" என்று கூறினார்.

பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த திருமணம்

சரத்குமார் - ராதிகா திருமணம், அந்த காலகட்டத்தில் திரையுலகில் பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

"எங்களுடைய கல்யாணம் நடந்தது பலருக்கே அதிர்ச்சி. அதிலும் நடிகர் அரவிந்த்சாமி ரொம்ப ஷாக் ஆனார். நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த காலத்தில், அவர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்பீக்கராக வந்திருந்தார். ஆனா கல்யாணம் நடந்த பிறகு, 'என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே'னு கோபப்பட்டார்" என சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

Actor Sarathkumar Radhika

சரத்குமார் பயோகிராபி

சரத்குமார், 1980-களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஆக்ஷன் ஹீரோ, குடும்ப நாயகன் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். 'சூரியன்', 'நாட்டாமை', 'நட்புக்காக', 'சமுத்திரம்' போன்ற படங்கள் அவரது நடிப்பு வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தவை. பின்னர் அரசியலிலும் ஈடுபட்டு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (AISMK) தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

ராதிகா சரத்குமார் சினிமா வாழ்க்கை

ராதிகா சரத்குமார், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்த முன்னணி நடிகை. 1980-90 காலகட்டங்களில் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பின்னர் 'ராதிகா டெலிவிஷன்' நிறுவனம் மூலம் பல வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து, சின்னத்திரையிலும் பெரிய பங்களிப்பு செய்துள்ளார்.

திருமண வாழ்க்கை

சரத்குமார் - ராதிகா திருமணம் 2001ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முன்பு, சரத்குமாருக்கு சாயா என்பவரிடம் திருமணம் நடந்திருந்தது. அந்த திருமணத்தில் பிறந்தவர்கள் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் ஆகியோர் உள்ளனர்.

அதேபோல், ராதிகாவுக்கும் முன்பு திருமணம் இருந்த நிலையில், அந்த உறவிலிருந்து ரயன் (Raayan) என்ற மகளும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு, சரத்குமார் - ராதிகா குடும்பம் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வருவதாக திரையுலகில் பலரும் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+