சரத்குமார் வாரி கொடுப்பதில் வள்ளல்.. சூட்டிங் ஸ்பாட்டில் கவரில் பணம்.. ரகசியம் உடைத்த பிரபலம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பஞ்சமிக்கு நடிகர் சரத்குமார் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதை பார்த்ததும் சந்தோஷத்தில் பாபா பாஸ்கர் சரத்குமார் பற்றி சில ரகசியங்களை நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது வரலட்சுமி இன்னும் சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் என்ற பெயரில் சமீபத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற தவிப்போடு இருக்கும் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆடிஷனில் கலந்து கொண்டனர். அதில் ஒரு சில போட்டியாளர்களை மட்டும் தேர்வு செய்து இருக்கின்றனர்.

புது கூட்டணி
இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதைப்போல இந்த நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் போன்றோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார். இப்போது அவரோடு சேர்ந்து மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பஞ்சமியின் திறமை
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக முதல் வாரத்திலேயே மக்கள் மத்தியில் பஞ்சமி என்ற போட்டியாளர் இடம்பிடித்து விட்டார். இவர் 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் அவருடைய டான்ஸ் திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். வயற்காட்டிலும் கரும்பு வெட்டும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் பஞ்சமி இந்த நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களில் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

வீடியோ காலில் சரத்குமார்
அதிலும் கடந்த வாரத்தில் அவர் சூரிய வம்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு நடிகர் கதிருடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தார். கடந்த வாரத்தில் பழைய பாடல்களை ரீ கிரியேட் செய்யும் ரவுண்டு நடைபெற்றது. அப்போது வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அப்பாவான சரத்குமாருக்கு வீடியோ காலில் இவர்களின் டான்ஸை காட்டிக் கொண்டிருந்தார்.
சலக்கு சலக்கு பாடல்
சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி ஆடிய எவர்கிரீன் பாடல்களில் ஒன்றாக இந்த பாடலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் பஞ்சமியின் டான்ஸை பார்த்து பாராட்டிய சரத்குமார் நாளைக்கு கண்டிப்பாக நீங்க உங்க குழந்தை மற்றும் கணவருடன் எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும் என்று கூப்பிட்டு இருந்தார். அது போல பஞ்சமிக்கு சப்போர்ட் செய்யும் அவருடைய கணவரையும் பாராட்டி இருந்தார்.

பாபா பாஸ்கர் சொன்ன ரகசியம்
அப்போதுதான் பாபா பாஸ்கர் சரத்குமார் பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதாவது சரத்குமார் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது டான்ஸ் மாஸ்டர் மற்றும் ஃபைட் மாஸ்டர், ஸ்டண்ட் செய்பவர்கள் எல்லோரிடமும் சில கேள்விகளை கேட்பாராம். அப்போது அவர்கள் அந்த கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லிவிட்டால் ஒரு கவரில் போட்டு பணம் கொடுப்பாராம்.
வாரி கொடுத்த வள்ளல்
அந்தக் கவரில் குறைந்தபட்சம் 20 ஆயிரமாவது இருக்குமாம். இப்படி தன்னுடைய உதவியாளர்களிடம் ஒரு பேக்குக்குள் பல கவர் வைத்திருப்பாராம். அதை சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் ஏதாவது கேள்வி கேட்டு எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பாராம்.

காரை விற்று உதவி
யாருக்கு எந்த உதவிகள் என்றாலும் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என்று பாபா பாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியாது என்று நினைக்கிறேன், என்னுடைய அப்பாவின் நண்பர்கள் சிலர் டூர் போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் அதற்கு போதிய பணம் இல்லாமல் இருந்திருக்கிறது. உடனே என்னுடைய அப்பா தான் வைத்திருந்த காரை விற்று அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். இது எங்களுக்கு பிறகுதான் தெரிய வந்தது என்று சொல்லியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
