நடிகை கனகா காணாமல் போக காரணமே இதுதான்.. சரத்குமார் சொன்ன பகீர் ரகசியம்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார் தன்னோடு சாமுண்டி திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை கனகா தற்போது சினிமாவில் இல்லாமல் காணாமல் போய் இருப்பது குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அந்த பேட்டியில் கனகா மட்டுமல்ல தமிழ் சினிமாவை சார்ந்த பல நடிகர் நடிகைகளின் நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது என்று சில விஷயங்களை சொன்ன சரத்குமார் அதற்கு இதை செய்தால் அவர்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று சில விஷயங்களையும் அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ் களில் பேவரைட் கதாநாயகியாக பலருக்கும் பிடித்த நடிகை கனகா கரகாட்டம் திரைப்படத்தில் தொடங்கி தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை சில வருடங்களிலே பல படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியாத வகையில் தான் இருந்து வருகிறார். சினிமாவை விட்டு முழுமையாக விலகி இருக்கும் கனகாவை பற்றி அவருடைய ரசிகர்கள் அடிக்கடி தேடிக் கொண்டிருக்கின்றனர்.
கனகா சினிமாக்களிலும், சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினியை சந்தித்து இருந்தார். அப்போது குட்டி பத்மினி கனகாவோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர அது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கனகாவா இப்படி மாறிவிட்டார் என்று சொல்கிற மாதிரிதான் கனகா உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார் இடம் ஒரு பேட்டியில் கோபிநாத் கேள்வி கேட்டிருக்கிறார். அதில் சரத்குமார் ரோடு சாமுண்டி திரைப்படத்தில் கனகா நடித்திருந்த நிலையில் அதற்குப் பிறகு ஏன் இவர் இப்படி மாறிவிட்டார் என்று நீங்கள் நினைக்கிறீங்க என்று கேட்க அதற்கு சரத்குமார், நான் நடித்ததில் சாமுண்டி படம் பெரிய அளவில் வசூல் செய்தது. அந்த படத்தில் கனகா எனக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் தன்னுடைய வேலையை அவ்வளவு நேசித்து செய்தார்.
ஆனால் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஏமாற்றங்களும், அதை தாங்கிக் கொள்ள முடியாத நிலையும் தான் அவர் இப்படி சினிமாவை விட்டு விலகி போய் இருப்பதற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் அதனால் தான் எப்போதும் சொல்வது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன். காரணம் சினிமா துறையில் இருப்பவர்கள் மற்ற துறையைப் போல இல்லாமல் பெரிய அளவில் மன அழுத்தத்தில் எதிர்காலத்தை நினைத்து பயத்திலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கஷ்டப்பட்டு நம்முடைய உழைப்பை கொட்டி இருக்கிறோமே... நம்முடைய நடிப்பை காட்டி இருக்கிறோமே இது மக்களுக்கு பிடிக்குமா? நாளைக்கு நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஒரு பெரிய அழுத்ததில் தான் சினிமா துறையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதுபோல சினிமாவால் குடும்பத்திலும் பலருக்கு பிரச்சனைகள் வரதான் செய்கிறது. அதிலிருந்தும் மீண்டு வருபவதற்கு அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்தால் பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் சரத்குமார் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications