மகளுக்காக போட்டோகிராஃபராக மாறிய சரத்குமார்.. ராதிகாவின் ரியாக்ஷன்.. லீக்கான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருந்தது. மும்பை தொழிலதிபரான நிக்கோலாய் சச்சிதேவ் என்பவரோடு வரலட்சுமிக்கு எங்கேஜ்மென்ட் ஆகியிருக்கும் நிலையில் எங்கேஜ்மென்ட் வீடியோவை வரலட்சுமி வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தன்னுடைய மகளை போட்டோகிராஃபராக மாறி சரத்குமார் புகைப்படங்கள் எடுத்திருக்கும் நிலையில் இந்த க்யூட்டான மொமண்ட் பார்த்து ராதிகா மெய் சிலிர்த்து இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Sarathkumar s photographer daughter actress Varalakshmi engagement

நடிகர் சரத்குமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. 90ஸ்களில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போதும் முன்னணி நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் சரத்குமாரின் மூத்த மனைவியின் மகள்தான் வரலட்சுமி .

வரலட்சுமி போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். அதை தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்சி தேவ் என்பவருக்கும் நிச்சயம் நடைபெற்றிருக்கிறது.

Actor Sarathkumar s photographer daughter actress Varalakshmi engagement

நிக்கோலாய் சச்சி தேவ் ஆர்ட் கேலரி தொழிலதிபராக இருக்கும் நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு நிக்கோலாய் கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் அவர் கலிபோர்னியா நாட்டின் உலக அழகி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரலட்சுமிக்கு பலதரப்பட்டவர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் விரைவில் இருக்கும் நிலையில் தன்னுடைய நிச்சயதார்த்த வீடியோவை வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கியூட்டான பல மொமண்ட் இடம் பிடித்திருக்கிறது. வரலட்சுமி தன்னுடைய அம்மா அப்பா குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ராதிகா, ராதிகாவுடைய மகளோடு எடுத்த புகைப்படங்கள் என்று பல மொமண்ட்டும் அதில் இடம் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் ஒரு இடத்தில் சரத்குமார் தன்னுடைய மகளுக்கு போட்டோகிராஃபராக மாறி வித விதமாக போட்டோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு வரலட்சுமி அருமையான வாழ்த்துக்களும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி... நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாகவும் அன்பாகவும் உணர்கிறேன்.

எனக்கு பல போன் கால், மெசேஜ், சமூக வலைதள வாழ்த்துக்கள் என்று அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. எனக்கு நேரம் ஒதுக்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றிகள். இது ஒரு புதிய பயணம்... என் வாழ்வில் நீங்கள் அனைவரும் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களை நான் நேசிக்கிறேன் என்று வரலட்சுமி எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். இந்த கேப்ஷனுக்கு ராதிகா மிகவும் அழகு என்று பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல நமிதா உட்பட பல நடிகைகள் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+