"இளையதளபதி” பட்டம் எனக்கானது.. விஜய் அப்பாவிடம் கேட்ட போது சொன்ன வார்த்தை! நடிகர் சரவணன் ஓபன்
சென்னை: நடிகர் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான காலகட்டத்தில் அவருடைய பெயருக்கு முன்பு "இளைய தளபதி" என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே பட்டத்தை சில வருடங்கள் கழித்து நடிகர் விஜய்க்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்து சமீபத்தில் ஃபிலிமி பீட் தமிழுக்கு சரவணன் கொடுத்த பேட்டியில் இந்த பட்டம் குறித்து சில விஷயம் பகிர்ந்து இருக்கிறார்.
சில நடிகர்களுக்கு சில பட்டங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல நடிகர் விஜய்க்கு இளைய தளபதி என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு கூட விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் பயன்படுத்தும் இளைய தளபதி பட்டம் எனக்கானது தான் என்று அதற்கு பின்னால் நடந்த சம்பவத்தை நடிகர் சரவணன் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் சரவணன் பேட்டி
அதில் சரவணன் பேசுகையில், அப்போது நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் என்னுடைய சொந்த ஊரான சேலம் பக்கத்தில் ஒரு கூட்டம் நடந்தது. நம்ம ஊருக்கார பையன் ஒருவன் சினிமாவுக்கு போயிருக்கான்னு எனக்கு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ சேலம் திமுக கட்சியை சார்ந்த வீரபாண்டி ஆறுமுகம் என்பவர் தான் எனக்கு சினிமாவுல சேர்ந்தா ஏதாவது பட்டம் வேண்டும் என்று "இளைய தளபதி" என்று பட்டம் தந்தார்.
இளைய தளபதி பட்டம்
அதற்கு பிறகு நான் நடிச்சு வெளியான "நல்லதே நடக்கும்" படத்தில் டைட்டில் கார்டுல இளைய தளபதி சரவணன் போட்டாங்க. அதை தொடர்ந்து "சுந்தரம் பிளஸ் 2" என்று நான் அடுத்ததாக தயாரித்த சொந்த படங்களிலும் அதே பெயர் போடப்பட்டு வந்தது. ஆனால் சினிமாவில் அந்த நேரத்தில் எனக்கு எதிர்பாராத அளவிற்கு வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் சில வருடங்களில் திடீரென்று குறைய தொடங்கியது.
இயக்குநர் சொன்ன விஷயம்
சினிமாவில் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய அண்ணன் மற்றும் பிஏ இருவரும் தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். கதை கேட்பது, சூட்டிங் ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அவர்கள் சொல்வார்கள் நான் அதையே செய்து கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று ஒரு நாள் விஜய் ஹீரோவா நடிச்சு வெளியான ஒரு படத்துல அவர் பெயருக்கு முன்னாடி இளைய தளபதி என்ற பட்டத்தை பார்த்தேன்.

வாய்ப்பு இல்லை
பார்த்ததும் எனக்கு ஷாக்காக இருந்தது. அப்போது இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் ஆபீசுக்கு நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய் சந்திச்சு "சார் எங்க பட்டத்தை பயன்படுத்திருக்கீங்க" என்று கேட்டோம். அதற்கு அவர் உனக்கு படம் வந்தால் நீ போட்டுக்கோங்க என்று சொல்லிட்டாரு. அந்த நேரத்தில் அடுத்தடுத்து விஜய் படங்களில் இளைய தளபதினு போட்டுட்டு வந்தாங்க. எனக்கு அப்போது எந்த படமும் வரவில்லை. அது எதனால என்று எனக்கு தெரியவில்லை. யார் சொல்லி எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது என்று இப்ப வரைக்கும் எனக்கு புரியவில்லை. அதனால் அந்த பட்டம் அப்படியே போய்விட்டது" என்று அந்த பேட்டியில் சரவணன் பேசியிருக்கிறார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications