Ravi Mohan: தனித்துவமில்லாத ரவி மோகன்! தவறிழைத்த ராஜா! சுதாரித்த சரவணன்! நோ கமெண்ட்ஸ் ஆன் கெனிஷா!
சென்னை: ரவி மோகனை "தனி ஒருவன்" படத்தில் ஹீரோவாக்கியது, அண்ணன் ராஜா மோகனின் தவறு. "ரவி மோகன் ஸ்டுடியோ" போல் நடிகர் சரவணனும் சேலத்தில் ஒரு ஸ்டுடியோவை தொடங்கியுள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் சரவணனின் இந்த முயற்சி நல்லது தான் என்கிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டது.

முதலாவது ஜெயம் ரவி புதிய தயாரிப்பு கம்பெனி தொடங்கி அதற்கு ஒரு தொடக்க விழா நிகழ்ச்சி நடத்தி இருப்பது.
என்ன தான் நிகழ்ச்சி நடத்தினாலும் இது அவருடைய வீழ்ச்சியைத் தான் காட்டுகிறது. சூதாட்டத்தில் விட்டதை பிடிப்போம்னு திரும்ப திரும்ப விளையாடுவார்கள். சில நேரம் ஓகே ஆகும். சில நேரம் அது எழ முடியாம அடிச்சிடும்.
நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் பள்ளி மொத்தமும் பைசா வசூல் செய்து பள்ளி நிர்வாகமே ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போனது. படத்தின் பெயர் 'அதிசய மிருகங்களும், அற்புத பறவைகளும்'. அப்போதெல்லாம் இப்போ மாதிரி Zooக்கள் அதிகம் கிடையாது.
அப்படி படம் பார்த்த போது தெரியாது இந்த ஒவ்வொரு டிக்கெட்டின் விலையிருந்து ஒரு நாயகன் ரவி பின்னாளில் வருவாரென. ஆம். அந்த ஆங்கிலப் படத்தை வாங்கி தமிழ் டப் செய்து தமிழ்நாடு முழுக்க வெளியிட்டு, பள்ளிகளோடு பேசி மாணவர்களை பார்க்க வைத்து அப்படியெல்லாம் காசு சேர்த்தவர் எடிட்டர் மோகன்.
அவர் உழைப்பும், முயற்சியும் அபரிமிதமானது. எனக்குத் தெரிஞ்சி ஜெயம் ரவி ஒரு ஹீரோ மெட்டீரியலே கிடையாது. ஏன்னா தனக்குன்னு தனி பாணி நடிப்பே அவரிடம் கிடையாது. இயக்குனர் சொல்கிற மாதிரி செய்து விட்டு போவார். ஒரு இயக்குனர் எந்த மாதிரி காட்சி தந்தாலும் அதில் தன்னுடைய ஏதாவது ஒன்றை சேர்த்து ஆடியன்ஸோடு கனெக்ட்டாக முயற்சி செய்ய வேண்டும். அது ரவியிடம் கிடையாது. அவர் லவ்வர் பாயாக நடிக்கும் வரை ஹிட்டுகளாக வந்தன. எப்போ மனதில் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக நினைச்சிட்டு இறங்கினாரோ அப்போதிருந்தே அடி தான்.
அவர் படங்களில் "பேராண்மை", "எம்.குமரன்", "ஜெயம்", "சந்தோஷ் சுப்ரமண்யம்", "உனக்கும் எனக்கும்" இப்படி சில படங்கள் தான் மனதிலேயே நிற்கிறது. அண்ணன் ராஜா, ரவியை வைத்து படம் எடுத்து சோடை போனதில்லை. மேலே சொன்னது எல்லாமே கதைப் படங்கள். ரவி இடத்தில் யார் இருந்தாலும் ஹிட்டாகும். அண்ணன் ராஜா செய்த மாபெறும் தவறு 'தனி ஒருவன்' படத்தில் சித்தார்த் அபிமன்யூவாக ரவியை நடிக்க வைக்காதது.
இன்று வில்லனாக ரவி நடிக்கிறார். அன்று அர்விந்த் சாமிக்கு Come back கொடுத்ததாக அப்படம் மாறியது ரவியின் துரதிர்ஷ்டம். ராஜாவின் கணக்கு ரவியிடம் தவறி விட்டது.
குடும்பப் பிரச்சினை, பணப் பிரச்சினைக்காக ரவியின் இந்த முயற்சிக்கு எல்லோரும் வந்து ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்கள்.
சினிமாவின் தற்போதைய காலசூழ்நிலையில் இது ரிஸ்க் தான். ரவிக்கே வெளிச்சம். நாமும் வாழ்த்துவோம். இரண்டாவது விஷயம் நடிகர் சரவணன் சேலத்தில் சினிமா ஸ்டுடியோவை வினாயகர் சதுர்த்தி அன்று திறந்திருப்பது. 50 வருடங்களுக்கு முன்பு சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற நிறுவனம் ஸ்டுடியோ அமைத்திருந்தது சேலத்தில் தான்.
அதன் நுழைவு வாயில் மட்டும் எஞ்சி இருக்க பாக்கி நிலமெல்லாம் விற்கப்பட்டு விட்டது. நடிகர் சரவணன் நடிகை லக்ஷ்மியால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர். விஜய்காந்த் போல கண்கள் இருந்ததால் சரவணன் ஹீரோவாக வர, லக்ஷ்மியும், கணவர் சிவச்சந்திரனும் தங்கள் வீட்டிலேயே வைத்து வளர்த்தனர். ஒரு கட்டத்தில் நடிகனானாலும், பெரிதாக வளர முடியவில்லை.
பெருந்தோல்வியிலிருந்து மீண்டு பின் வாய்ப்புகளில் கிடைத்த பணத்தை வைத்து சேலத்தில் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார்.
இன்று அதில் அவர் உருவாக்கிய ஸ்டுடியோக்கான எல்லா வசதிகளும் உள்ளேயே வைத்திருக்கிறாராம்.
உள்ளே போய் விட்டால் ஒரு முழுப் படமும் எடுத்து விட்டு வெளியே வரமுடியுமாம். சென்னையில் ஸ்டுடியோக்கள் அழியும் காலத்தில் இந்த முயற்சி மிகச்சிறப்பானது. எல்லா இயக்குனர்களும் அங்கு படமெடுத்து அவரது ஸ்டுடியோவை வாழ வைக்க வேண்டும். சரவணன் காலம் கடந்தாலும் சரியான வழியை பிடித்திருக்கிறார்.
ரவி, சரவணன் இரண்டு பேரில் சரவணன் முயற்சி அபாரமானது. ரவியின் ரவிமோகன் தயாரிப்பு நிறுவன நிகழ்ச்சி போல மேட்டிமைத்தனம் இருக்காது. வெள்ளந்தித்தனம் சரவணனின் நிகழ்ச்சியில் இருக்கலாம். சரவணனை வாழ்த்துவோம். என்னது.. கெனி....கெனிஷாவா? அட நமக்கு எதுக்குப்பா அவங்க விஷயம்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications