என்னை விஜயகாந்த் கூட கம்பேர் பண்றதை ஏத்துக்க முடியாது! விஜய் அரசியல் பற்றி சரவணன் கொடுத்த பதில்
சென்னை: நடிகர் சரவணன் 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் விஜயகாந்தின் தம்பி என்று இவரை பலரும் அழைத்து இருந்தனர் ஆனால் விஜ்காந்த் உடலில் என்னை கம்பேர் பண்ணுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்ல கோபம் தான் வரும் என்று சரவணன் பேசியிருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சரவணன் 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் நடித்த அதிகமான திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதிலும் விஜயகாந்தின் தம்பி போல இருக்கிறார் என்று பலரும் அவரை கூறி வந்தனர். ஆனால் விஜயகாந்துக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் முறையும் கிடையாது. ஆரம்ப காலகட்டத்தில் சரவணன் நடித்த திரைப்படங்கள் வெற்றியடைந்ததும் அவர் சில திரைப்படங்களை தயாரித்து இருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த சரவணன் பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு கேரக்டர் மூலமாக மீண்டும் ரீ இன்றி கொடுத்திருந்தார்.

சட்டமும் நீதியும் வெப் சீரிஸ்
பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வெப் சீரிஸ் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பல வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் "சட்டமும் நீதியும்" வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சரவணன் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் போல இல்லை
அதில் ஆரம்பத்தில் தனக்கு விஜயகாந்த் உடன் தன்னை கம்பேர் பண்ணி பேசுவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை கோபம் தான் வரும் என்று சரவணன் கூறியிருக்கிறார். அவர் பேசும்போது சிலர் என்னை பார்க்கும்போது விஜயகாந்த் தம்பி என்று சொல்லுவாங்க. நான் விஜயகாந்தின் ரசிகர் எல்லாம் கிடையாது. நான் ஸ்கூல் படிக்கும்போது விஜயகாந்தின் இரண்டு படங்கள் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்கள் எல்லாம் எனக்கு அவ்வளவு பெருசாக அந்த நேரத்தில் பிடிக்காது. ஏன்னா நான் ரஜினியின் ரசிகன். இதை பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். விஜயகாந்த் வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. நான் இப்படி சொல்வதால் யாரும் தப்பா நினைக்க வேண்டாம். விஜயகாந்த் எவ்வளவு பெரிய ஆள் அவரோடு என்னை கம்பேர் பண்ணுவது சரி இல்லை இன்று சரவணன் சொல்லி இருக்கிறார்.
விஜய் பற்றி கருத்து
மேலும் சரவணன் பேசும் போது அவரிடம் விஜய் உடைய அரசியல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, "விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதற்கு முன்பு அவரை எதிர்ப்பது தப்பு, அவரைப் பற்றி குறை சொல்வதும் தப்பு. அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பொருத்து இருந்து பார்த்தால் தானே தெரியும்? அவர் அரசியலில் வந்து ஏதாவது செய்யட்டும்.. செய்த பிறகு அது சரியா? தவறா? என்று சொல்லலாம் என்று சரவணன் பதில் கொடுத்திருக்கிறார்.
-
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!











Click it and Unblock the Notifications