வரலட்சுமி இப்படித்தான், வெளியே தெரியாது! என்கூட பேச மாட்டாங்க! வாட்ஸ் அப்பில் மெசேஜ்! சசிகுமார் ஓபன்
சென்னை: நடிகர் சசிகுமார் தான் நடித்த நந்தன் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி பலருடைய பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தன்னோடு சினிமாவில் நடித்த நடிகைகள், நடிகர்கள் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் பற்றி பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதில் வரலட்சுமி என் மீது கோபமா இருக்காங்க, அதுக்கு காரணம் இதுதான் என்று சில ரகசியங்களை பகிர்ந்திருக்கிறார்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பலர் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். அங்கு வந்ததும் யாருக்கும் இந்தாங்க வாய்ப்பு என்று எளிதாக கிடைத்து விடுவது கிடையாது. பல போராட்டங்களுக்கும், அவமானங்களுக்கும் பிறகுதான் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பு கூட ஒரு சிலருக்கு தான் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர் தான் சசிகுமார்.

ஆரம்பத்தில் தன்னுடைய சொந்த ஊரான மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்குனராக வேண்டும் என்று வந்திருந்த நிலையில் அங்கு தன்னுடைய மாமாவோடு சேது படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதற்குப் பிறகு உதவி இயக்குனராக அமீரிடம் பயிற்சி பெற்று பிறகு சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற திரைப்படங்களை இயக்கி, நடிக்கவும் தொடங்கியிருந்தார். இப்போது முன்னணி நடிகராக மாறியிருக்கிறார்.
ஆனாலும் சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனது. அதற்கு காரணம் கூட எனக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததால் கதை கேட்காமலேயே நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால்தான் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இப்போது அயோத்தி, நந்தன் போன்ற வெற்றிகரமான நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் நடிகை வரலட்சுமி பற்றியும் பேசி இருக்கிறார். தார தப்பட்டை திரைப்படத்தில் சசிகுமார், வரலட்சுமிையும் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் வரலட்சுமி கழுத்து எலும்பு உடைந்துவிட்டது ஆனாலும் காட்சி முடிகிற வரைக்கும் அது பற்றி சொல்லாமல் பிறகுதான் பாலாவிடம் சொல்லிவிட்டு நான் சிகிச்சை எடுக்க போயிருந்தேன் என்று வரலட்சுமி பேட்டியில் பேசியிருந்தார்.
அதேபோல தாரை தப்பட்டை திரைப்பட அனுபவம் குறித்து சசிகுமார் பேசுகையில், நான் என்னுடைய நடிக்கும் படங்களில் நடிகைகள் மற்றும் நடிகர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டது வரலட்சுமி தான். நான் தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது வரலட்சுமி என்னோடு நடித்திருந்தார்.
எப்போது என்னை பார்த்தாலும் சாப்டாச்சா என்று கேட்பார். இதில் உட்காருங்கள் என்று இருக்கும் இடத்தை துடைத்து கூட தருவார். அவர் ஒரு செலிபிரட்டி பொண்ணு என்று கொஞ்சம் கூட பிகு பண்ணுனதே கிடையாது. சாதாரண நடிகைகள் போலத்தான் வரலட்சுமி நடந்து கொள்வார். ஆனால் ரொம்பவும் தைரியமான பொண்ணு. யாரிடமும் பளிச்சென்று பேசும். பேசும் வார்த்தைகளும் கணீர் கணீர் என்று ஒலிக்கும்.

நான் வரலட்சுமியை வியந்து பார்ப்பேன். நான் தானே எல்லா நடிகைகளையும் பத்திரமாக பார்ப்பேன் ஆனால் இந்த பொண்ணு என்னையே பத்திரமா பார்த்துக்கிறதே என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவங்களோட கல்யாணத்திற்கு எனக்கு இன்விடேஷன் கொடுத்திருந்தாங்க. நான் அந்த கல்யாணத்திற்கு ரஜினி, கமல், முதலமைச்சர், பிரதமர் எல்லாரும் வாராங்களே நம்மை கண்டுக்க மாட்டாங்க என்று போகாமல் விட்டுவிட்டேன்.
அதற்கு என் மீது கோபப்பட்டு சில நாட்களுக்கு முன்பு ஒரு விஷயமாக பேசிக் கொண்டிருக்கும்போது எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் பண்ணி இருந்தார். நான் உங்கள் மீது கோபமாய் இருக்கிறேன். நீங்க என் கல்யாணத்திற்கு வரவில்லை என்று சொல்லி இருந்தார். எனக்கு திக் என்றது. வரலட்சுமி ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா அவருடைய உண்மையான குணங்கள் வெளியில யாருக்கும் தெரியாது என்று அந்த பேட்டியில் சசிகுமார் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications