போங்கடா நீங்களும் உங்க சீரியலும்.. பாக்கியலட்சுமியிலிருந்து கிளம்பி சென்ற "கோபி".. பரபரப்பு வீடியோ
சென்னை: போங்கடா நீங்களும் உங்க சீரியலும் என பாக்கியலட்சுமி சீரியலை விட்டு நடிகர் சதீஷ் கிளம்பி சென்றதாக அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. தனது மனைவிக்கு துரோகம் செய்யும் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். பாக்கியா கதாபாத்திரத்தில் சுசித்ராவும் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்துள்ளனர்.

மனைவி பாக்கியாவுக்கு துரோகம் செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. இதனால் அவர் என்னென்ன இன்னல்களை சந்திக்கிறார் என்பதுதான் கதை. கோபியின் இந்த துரோகத்தை அவருடைய தாய், தந்தை, மகன்கள் , மகள் என அனைவருமே கண்டிக்கிறார்கள்.
இந்த நிலையில் பாக்கியா சமையல் பிசினஸில் வளர்ந்து வருகிறார். அவ்வப்போது சறுக்கல்களையும் சந்திக்கிறார். ஆனாலும் அவர் பிஸினஸ் செய்வது என்பது கோபிக்கு உறுத்தலாகவே இருக்கிறது. தற்போது கோபியின் மனைவி ராதிகாவும் பாக்யாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்குகிறார்.
பொருட்காட்சியில் பாக்யா கேன்டீன் திறந்துள்ளார். இந்த திறப்பு விழாவுக்கு ராதிகாவுக்கும் பாக்யா அழைப்பு விடுத்துள்ளார். இது ராதிகாவுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த விழாவில் பழனிசாமி, ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார். அப்போது ராதிகாவை பார்த்த பாக்யா, வாங்க வாங்க நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார்.
அப்போது பாக்கியாவிடம் பழனிசாமி, ஏன் மேடம் உங்கள் வாழ்க்கையை அவங்க (ராதிகா) வாழ்ந்து கொண்டிருக்காங்க, எப்படி உங்களால இப்படி இயல்பா பேச முடியுது என கேட்கிறார். இதை கேட்ட பாக்யா இப்போது நான் வளர்ந்திருக்கேன், ரொம்ப சந்தேஷமாக இருக்கு சார், திருப்தியாவும் நான் இருக்கேன் என சொல்கிறார்.
அது போல் பாக்யாவை என்னால் வெறுக்க முடியாது என சொல்லும் ராதிகா, அவங்கள நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது என கேட்க அதற்கு பழனிசாமி அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் போது சீரியல் நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்துவிட்டேன். பாட்டி, அத்தை தான் என்னை வளர்த்தார்கள். இப்போது எனது மனைவியால் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நானும் உங்கள் மாதிரி மனுஷன்தான். எனக்குள்ளும் வருத்தம் வேதனைகள் இருக்கும். பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக டைவர்ஸ் செய்த பாக்யாவை நான் கொடுமைப்படுத்துகிறேன்.
மொள்ளமாரித்தனத்தை செய்கிறேன். இதையெல்லாம் புடிச்சிதான் செய்றேன்னு நீங்கள் நினைக்கிறீங்களா, நிச்சயமா இல்லை, இதெல்லாம் எனக்கு கசப்பான விஷயம் ஆகும். நிறைய முறை போங்கடா நீங்களும் உங்க சீரியலும் என கிளம்பி போயிடலாம்னு இருக்கும். கிளம்பி கூட போயிருக்கேன் என சதீஷ் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications