குடும்பத்தை பிரிக்க வெளியே இருந்து வர்றவங்க! விஜய் மகனுக்கு அட்வைஸ் கொடுத்த சத்யராஜ் மகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இப்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்திற்காக வாழ்த்து சொல்லி திவ்யா பேசியிருக்கிறார். ஆனால் அதில் அவர் பேசியதில், ஒரு அழகான குடும்பத்தை வெளியிலிருந்து வருகிறவர்களால் ஒன்றுமே பண்ண முடியாது என்ற வார்த்தை தான் இப்போது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

சத்யராஜ் மகள் பேட்டி

திவ்யா யாரை மனதில் வைத்து இதை சொன்னார்? என்பது தான் இணையத்தில் எழும் கேள்வி. திவ்யா சத்யராஜ் தனது வீடியோவில், "சில நாட்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சயின் பேட்டியை பார்த்தேன். அதில் அவர் மிகவும் இயல்பாகவும் உண்மையாகவும் பேசி இருந்தாரு. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சின்ன விஷயத்தையும் சொல்லிக்க விரும்புகிறேன். ஒரு அழகான குடும்பத்தை வெளியே இருந்து வர்றவங்க ஒண்ணுமே பண்ண முடியாது. சிக்மா படத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று திவ்யா சத்யராஜ் கூறி இருக்கிறார்.

யார் அந்த நபர்

இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே அந்த ஒரு வரி மட்டும் சோசியல் மீடியாவில் தனியாக சுற்ற ஆரம்பித்துவிட்டது. வெளியில் இருந்து வர்றவங்க என்று இவர் யாரை சொல்லி இருக்கிறார் என எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ஏற்கனவே திவ்யாவிற்கு விஜயின் அரசியல் பிடிக்காததால் அப்பாவை எதிர்த்து விட்டு மகனுக்கு சப்போர்ட் பண்ணுவது போல இப்பொழுது குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறி வருகிறார்கள்.

Divya Sathyaraj Vijay

விஜய் குடும்ப சர்ச்சை

கடந்த சில மாதங்களாகவே விஜய் குடும்பத்தை சுற்றி பல பிரச்சனைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக விஜய் மனைவி விவாகரத்து வழக்கு கொடுத்தது, அதில் ஒரு நடிகை உடன் விஜய்க்கு தொடர்பு என்று சொன்னது, பிறகு அந்த விவாகரத்து வழக்கை அவர் வாபஸ் வாங்கியது என பல விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திவ்யா இப்போது "வெளியில் இருந்து வர்றவங்க" என்று பேசி இருப்பதால் விஜயின் மனைவி சொன்ன அதே நடிகையைப் பற்றித்தான் இவர் இப்போ மறைமுகமாக பேசுகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.

விஜய் மகனுக்கு அட்வைஸ்

ஏற்கனவே ஜேசன் சஞ்சய் தான் இயக்கிய சினிமா படத்திற்கு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் தனது அப்பா விஜய், அம்மா சங்கீதா, தங்கை திவ்யா சாஷா ஆகியோரை பற்றி பெருமையாகவும் வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார். குறிப்பாக தனது அம்மா தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தூண், நான் இயக்குனராக போகிறேன் என்று அம்மாவிடம் தான் முதலில் சொன்னேன் அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

லண்டனில் இருந்து அப்படியே தாராபுரம் செல்லும் விஜய்.. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்
அதுபோல அப்பாவிடம் சொன்னதும், உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளு. ஆனால் நானாக உனக்கு உதவ மாட்டேன் நீ கேட்டால்தான் உனக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும் என்று சொன்னதாகவும் ஜேசன் சொல்லி இருந்தார். இந்த நிலையில் சத்யராஜ் மகள் பேசிய வீடியோ இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+