ஏய் உன்னத்தான் உன்னத்தான் இன்ஸ்டாகிராம் பெண்ணை தெரியுமா?சதீஷ் கேட்ட கேள்வியை பாருங்க
சென்னை: நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் instagram-யில் பிரபலமாக இருக்கும் பெண்ணை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் ஏய் உன்னைத்தான் என்ற வார்த்தையை வைத்து பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வரும் இந்த வீடியோவை வைத்து சதீஷ் கேள்வி எழுப்பி இருப்பது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வெள்ளித்திரையில் காமெடி நடிகராக நடித்து வரும் சதீஷ் பலருக்கும் பரிச்சயமான ஒரு நடிகர்தான். இவருடைய டைமிங் காமெடியால் இவரை ரசிக்கும் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இவர் அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தற்போது தன்னுடைய முயற்சியாலும், உழைப்பாலும் பலருக்கும் பரிச்சயமான நபராக மாறியிருக்கிறார்.
படிப்பதற்கு கூட வசதி இல்லாமல் இருந்த இவர் தற்போது தன்னுடைய அடையாளத்தை அனைவருக்கும் தெரிய வைத்துள்ளார். நடிப்பில் ஆர்வம் கொண்ட சதீஷ் இளம் வயதில் வீட்டிலிருந்த ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட்டு நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார். தனது 14 வது வயதில் கிரேசி மோகன் குழுவில் இணைந்துள்ளார்.
இந்த குழுவில் 8 ஆண்டுகள் பகுதிநேரமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் கிரேசி மோகன் இவருக்கு படிப்பதற்கு உதவி செய்து இவரை படிக்க வைத்துள்ளார். அதற்கு பிறகு படித்துக்கொண்டே பல நாடகங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் மூலமாக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஏ.எல்.விஜய், சதீஷை பொய் சொல்ல போகிறோம் என்ற படத்திற்கு இணை உரையாடல் எழுத்தாளராக ஆக்கியிருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு மதராசப் பட்டினத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அறிமுகமானது ஜெர்ரி திரைப்படத்தில் தான். ஃபரிக் என்ற சிறிய கதாபாத்திரத்தில் தான் எந்த ஒரு உரையாடலும் இல்லாமல் இரண்டு காட்சிகளில் காட்டப்பட்டுள்ளார்.
அதற்குப் பிறகு இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் பீட்டர் ஆக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவர் தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த மாதிரி தான் தன்னுடைய twitter பக்கத்தில் instagramல் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஏய் உன்னைத்தான் என்கிற வார்த்தையை பேசி ரீல்ஸ் வெளியிடும் பெண்ணைப் பற்றி விசாரித்து இருக்கிறார்.இந்தப் பெண் வெளியிடும் வீடியோக்கள் அதிகமாக வைரலாகி வருகிறது. இந்தப் பெண் bonie_stone_23 என்ற ஐடியில் வீடியோஸ் வெளியிட்டு வருகிறார்.
இவருக்கு 610கே பாலோவர்ஸ் இருக்கின்றனர். இவர் இதுவரைக்கும் 73 பதிவுகள் தான் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இவருடைய ஒவ்வொரு பதிவுகளும் அதிகமான அளவில் வைரல் ஆகிவிடுகிறது. இது குறித்து சதீஷ் யாருப்பா அந்த ஏன் உன்னைத்தான் பொண்ணு என்று பதிவு வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அதிகமான ரசிகர்கள் அந்த பெண்ணுடைய வீடியோஸ்களை சதீஷுக்கு ஷேர் செய்து வருகிறார்கள். அதுபோல 90ஸ் கிட்ஸ்களை சிரிக்க வைக்கும் பெண் என்றால் அது இவர்தான் என்று பல கருத்துக்கள் தற்போது குவிந்து வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications