நடிகை சீதாவை கல்யாணம் செய்து ஏமாற்றினேனா? நடந்தது இதுதான்.. நடிகர் சதீஷ் கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகை சீதா பார்த்திபனை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்ட பிறகு 43 வயதில் சீரியல் நடிகர் சதீஷை காதலித்து திருமணம் செய்து அவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்து விட்டார் என்று இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் அதை சீரியல் நடிகர் சதீஷ் மறுத்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இவர் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட நடித்து இருந்திருக்கிறார். பல படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் அந்த வாய்ப்புகளை கூட ஒதுக்கி வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருந்த இவருடைய சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கியமான காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான்.

முதல் முறையாக பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்த சீதா ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறி, பிறகு தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலினால் தான் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தின் பாதியிலேயே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. சீதாவின் வீட்டில் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனோடு 1989 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு சீதா நடிப்பதில் பார்த்திபனுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் பிஸியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சினிமாவை விட்டுவிட்டாராம். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்திருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் ஒரு மகனையும் சீதா பார்த்திபன் தம்பதி தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பத்து வருடங்கள் கழித்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருக்கிறார். விவாகரத்து ஆனபிறகு மீண்டும் தன்னுடைய தந்தை வீட்டுக்கே வந்த பிறகு தன்னுடைய நடிப்பை துவங்கியிருக்கிறார். அப்போது இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த நேரத்தில்தான் சீதா 2010 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சதீஷை தன்னுடைய 43வது வயதில் காதலித்து திருமணம் செய்ததாகவும் பிறகு அவரோடு ஏற்படுத்த கருத்து வேறுபாட்டால் சில வருடங்களிலேயே பிரிந்து விவாகரத்தும் செய்துவிட்டார் என்றும் ஆனால் சீதாவை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியது சதீஷ் தான் என்று சீதாவின் சொத்துக்காக சதீஷ் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் இதற்கு எல்லாம் சீரியல் நடிகர் சதீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் நடிகை சீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்று சில செய்திகள் பரவி வருகிறது. இது பல வருடங்களாகவே வலம் வரும் வதந்திதான். ஆனால் உண்மையில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு திருமணம் நடைபெற்று இருந்தது. பிறகு கருத்து வேறுபாடல் நாங்கள் பிரிந்து விட்டோம். என்னுடைய குழந்தைகள் என்னுடைய முதல் மனைவியோடு தான் இருக்கிறார்கள்.
அவர்களிடம் என்னுடைய குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அதுபோல பார்த்திபனை சீதா பிரிந்ததற்கு பிறகு நான் அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என்றும் அவருடைய சொத்துக்களை நான் ஏமாற்றி விட்டேன் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் எல்லாம் உண்மையே கிடையாது.
நானும் சீதாவும் உண்மையில் நல்ல நண்பர்கள் நாங்கள் ஆரம்பத்தில் ஒன்றாக நடித்திருக்கிறோம். இப்ப வரைக்கும் குடும்ப நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுடைய வீட்டில் எந்த ஒரு பங்க்ஷன் என்றாலும் சீதா அதில் என்னுடைய தோழியாக கலந்து கொள்வார். அதுபோல நானும் எப்பவாவது நேரம் கிடைக்கும்போது சீதாவிடம் பேசுவேன் அவ்வளவுதான். ஆனால் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவும் இல்லை, விவாகரத்து ஆகவும் இல்லை என்று நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications